கிருஷ்ணன்கோவிலில் போக்குவரத்து நெருக்கடி

ஸ்ரீவில்லிபுத்துார்: - ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன் கோவிலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியால் ரோட்டை கடக்க மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றி சென்டர் மீடியன் அமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

கிருஷ்ணன் கோவிலை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ள நிலையில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு அதிகளவில் மாணவர்கள் வருவதால் கிருஷ்ணன்கோவில் மெயின் ரோட்டிலும், வத்தாயிருப்பு ரோட்டிலும் காலை, மாலை வேலை நேரங்களில் ஏற்பட்டு வருகிறது.

இதனால் ரோட்டை கடக்க முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிவேகத்தில் வரும் வாகனங்களால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

இதனை தவிர்க்க ரோடுகளின் இருபுறமும் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றியும், சென்டர் மீடியன் அமைத்து பாதுகாப்பான பயணத்திற்கு நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement