காங்., வாய்ப்பை காவு வாங்கினாரா சிதம்பரம்: ரவுத்திரம் ஆகிறார் ராகுல்!!
நமது சிறப்பு நிருபர்
இன்று நடந்துகொண்டு இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தைப் பார்க்கும்போது காங்கிரஸ் கட்சியை அதன் மூத்த தலைவர் ப.சிதம்பரமே ‛‛காவு'' வாங்கியது தெரிய வந்துள்ளது.
தேர்தலுக்கு முன் தமிழக காங்., எம்பிக்கள் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு மாற வேண்டும் என்று வெளிப்படையாக பேசத் துவங்கினர். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டனர். தமிழக காங்., பார்வையாளர் கிரிஷ் ஷோடங்கரும் இதற்கு பலத்த ஆதரவு அளித்தார்.
காங்., தேர்தல் தரவுகள் பிரிவு தலைவரும் ராகுலின் நண்பருமான பிரவீன் சக்ரவர்த்தியும் இது குறித்து நேரடியாக நடிகர் விஜய்யுடன் பேசினார். ராகுல் மீது அபிமானம் வைத்திருந்த விஜய்யும் இதற்கு கிட்டத்தட்ட ஒப்புக்கொள்ளும் நிலைமைக்கு வந்தார்.
ஆனால் தமிழக காங்., தலைவரும் திமுகவின் ‛‛ஸ்லீப்பர் செல்'' போல செயல்பட்டவருமான செல்வபெருந்தகைக்கு இது பிடிக்கவில்லை. திமுகவுடன் பசை போல் ஒட்டிக்கொண்டு இருந்த அவர், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்., மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை இதற்காக பிடித்தார். ஸ்டாலின் குடும்பத்தில் சிலரும் சிதம்பரத்தை சந்தித்தனர். இதன் விளைவாக டில்லியில் கட்சி தலைவர் என்ற முறையில் சோனியாவுடன் பேசி, மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைக்க வற்புறுத்தினார்.
காங்., சார்பில் ராஜ்யசபா எம்பியாக இருக்கும் சிதம்பரத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. மீண்டம் எம்பி ஆக வேண்டும் என்றால் அவர்கள் எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. திமுகவுடன் கூட்டணி அமைந்தால், அந்த எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் ராஜ்யசபா எம்பியாகி விடலாம் என்பது சிதம்பரத்தின் ‛‛பலே'' திட்டம். இதனாலேயே திமுகவையும் காங்.,கையும் ஒட்ட வைக்க படாதபாடு பட்டார் அவர்.
சிதம்பரம் கோரிக்கையை அடுத்து ராகுலிடம் சோனியா பேசினார். இதனால் ராகுலும் வேண்டா வெறுப்பாக அதற்கு ஒப்புக்கொண்டார். அந்த கோபத்தில் தான் தமிழகத்திற்கு பிரசாரம் செய்ய வந்த ராகுல், கடைசி வரை ஸ்டாலினை சந்திக்கவே இல்லை.
இந்நிலையில் இன்று தமிழக ஓட்டு எண்ணிக்கை நிலவரம் வெளிவந்துகொண்டு இருக்கிறது. யாரும் எதிர்பாராத விதமாக தவெக மக்களின் பேராதரவுடன் அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த காங்., கட்சியினர் பலர் ‛‛தவெக உடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம். விஜய் அமைச்சரவையிலும் அமோகமாக இடம் பெற்று, ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெற்றிருக்கலாம். கட்சியையும் தமிழகத்தில் வளர்த்திருக்கலாம். சிலரின் சுயநலத்தால் எல்லாம் பாழாப் போச்சே'' என்று புலம்புகின்றனர்.
தமிழக தேர்தல் முடிவுகளைப் பார்த்து காங்., தலைவர் ராகுலுடன் கடும் கோபத்தில் இருப்பதாக டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது கோபத்தை அவர் சிதம்பரம், செல்வப்பெருந்தகை போன்ற சுயநல தலைவர்களிடம் காண்பிப்பார் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ்க்கு வேட்டு வைக்க ஒரே ஒரு ப.சிதம்பரம் மற்றும் அவர் மகனே போதும்.
சட்டி சுட்டதடா கை விட்டதடா. புத்தி கெட்டதடா இந்த வேறு கிரகத்திலிருக்க வேண்டிய அளவில்லா மூளை வளர்ச்சி உடையவன்
நல்ல ராசியான மனிதர். திராவிட மாடல் கூட்டத்தை தனது நட்பு மூலம் கெடுத்தார் என்பதோடு, தன் கட்சியின் தோல்வி மூலம் தனது பழைய விசுவாசத்தை காட்டியுள்ளார்.
காணாடுகாத்தான் செட்டியார் பாவம். தானும் கெட்டு திராவிட பசங்களையும் கெடுத்து குட்டி சுவர் ஆகிட்டார்
திமுக வீழ்த்தப்பட்டது சரியான முடிவே. ஆனால், தவேக என்பது திமுகவை விட மோசமானது. ஏனென்றால், தா வெ க முழுவதும் எவாங்கலிஸ்ட்ஸ் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இனி மேலும் ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்படும் என்பதை தமிழக மாக்கள் எதிர்பார்க்கலாம்
கடவுள் இருக்கிறான் குமாரு
காங்கிரஸின் சகாப்தத்தை தமிழகத்தில் முடித்து வைத்தவர்கள் சிதம்பரமும் செல்வ பெருந்தகையும் தான்.
அப்பாடா உஸ் - ஸ் - ஸ் - ஸ் - ஸ் - அப்பாடா ஒருவழியா இந்தத் தெலுங்கக் கூமுட்டைக் கூத்தாடிகள வெரட்டி அடிச்சாச்சுப்பா அஞ்சு வருசமா நமக்குத் தாவு தீந்து போச்சும்மே
வந்த வேலையை ரெண்டுபேரும் சேர்ந்து செம்மையாக முடித்து விட்டனர் ப. சி க்கு ஒரு ராஜ்ய சபா mp சீட்டு வாங்கி கொடுங்கப்பா
பப்பு அம்மாவுடன் பேசி தவெகவுக்கு போக வேண்டியது தானே? யார் திமுகவுக்கு வாங்கன்னு கெஞ்சுனாங்க? சுயமாக சிந்தித்து பப்பு முடிவு செய்யாமல் தலைவர்களை நம்பியது யார் தவறு? இப்படி தான் காங்.சுக்கு பப்புவால் பின்னடைவு ஏற்படுகிறது!