வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி இல்லை தே.மு.தி.க., தொண்டர்கள் வாட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றாலும், தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்களிடம் மகிழ்ச்சி இல்லாமல் முகம் வாடியிருந்தனர்.
தி.மு.க., கூட்டணியில், 10 தொகுதிகளில் தே.மு.தி.க., களமிறங்கியது. இதில், விருத்தாசலத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா, விருதுநகரில் அவரது மகன் விஜயபிரபாகரன் களமிறங்கினர்.
ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே, விஜயின் விசில் சப்தம் மாநிலம் முழுவதும் புரட்டி எடுத்தது. இதில், பிரேமலதா மட்டும் வெற்றி பெற்ற நிலையில், மற்ற தொகுதிகளில் தே.மு.தி.க., வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்தனர்.
இதனால், விருத்தாசலம் நிர்வாகிகள், தொண்டர்களிடம் மகிழ்ச்சி இல்லாமல், முகம் வாடிய நிலையில் காணப்பட்டனர். குறிப்பாக, விஜயபிரபாகரன் தோல்வியடைந்ததால், அக்கட்சியினர் வருத்தமடைந்துள்ளனர்.
மேலும், விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், தி.மு.க., தலைமை ஆட்சியமைக்க முடியாது என்ற நிலையால், அவர்கள் மகிழ்ச்சியை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.