முதல்வர் விஜயுடன் மு.க.அழகிரி மகள் சந்திப்பு
சென்னை: முதல்வர் விஜயை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் சகோதரர் அழகிரி, தி.மு.க.,வில் தென்மண்டல அமைப்பு செயலராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதால், கட்சி பணிகளில் இருந்து, அவர் ஒதுங்கி இருக்கிறார்.
சமீபத்திய சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்து, த.வெ.க., ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற விஜய்க்கு, அழகிரியின் மகள் கயல்விழி, ஏற்கனவே வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜயை, நேற்று கயல்விழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, த.வெ.க.,வில் இணைய, கயல்விழி விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில், த.வெ.க., சார்பில் போட்டியிட கயல்விழி விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடிச்ச சொத்துக்களை காப்பாத்த அழகிகிரிக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு. விஜய் அண்ணா நீஙகள் ஜாக்ரதையாக இருக்கவும். உஙகள் கட்சி ஆளுக்கு கொடுக்க வேண்டிய பதவி இது. நினைவு இருக்கட்டும்.
நமது முதல்வர் விஜய் அவர்கள் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி அவர்களை திருச்சி கிழக்கு
தொகுதியில் நிற்கத்து ஜெயித்து அவரை ஓர் அமைச்சராக தனது அமைச்சரவையில்
சேர்த்துக்கொண்டால், திராவிட முன்னேற்ற கட்சி அடியோடு சாய்ந்துவிடும் அப்பன் புள்ளையாண்டான் பேராண்டி மருமகன் யாருமே தலை காட்ட முடியாது இதை முதல்வர் விஜய் அவர்கள்தான் சற்றே கூர்ந்து யோசித்து செய்ய வேண்டும். கயல்விழி அவர்கள் கட்சியில் அவர்க்கு பக்க பலமாகவே இருப்பார் இது இன்னொருவழியில் அந்த வாரிசு குடும்பத்தை அடக்கும் வழியாகும்
உளவு பார்க்க அனுப்பப்பட்டது போல் தெரிகிறது. இவர் மீது கவனம் தேவை.
madurai granite case 10000 crores filed by sagayam is coming for hearing. so vijay should be carefull. she is coming for serving people like his father Alagiri
விஜய் அவர்களே கவணம் ரொம்ப தேவை...அவ்வளவுதான் சொல்ல முடியும்.
கை அரிக்குது, எவ்வளவு நாள்தான் சும்மா இருக்கிறது.
இவருக்கு கட்சி யில் எந்தப் பொறுப்பும் கொடுகக வேண்டாம்.மேலும்
-
எபோலா வைரஸ் பரவல் எதிரொலி: போகக்கூடாத நாடுகள் பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு
-
தாய், மகன் இருவரும் பிரிட்டனில் மேயர்; ஹரியானா மாநிலத்துக்கு பெருமை
-
மின்வெட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கணும்; இபிஎஸ்
-
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஒரு திருப்புமுனை ஏற்படும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
நீங்கள்தான் அடுத்த பிரதமர்; ராகுலை குஷிப்படுத்திய பிரசாந்த்!
-
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் சுட்டுக்கொலை