அமலாக்கத்துறையிடம் வசமாக சிக்கினார் இன்னொரு திமுக மாஜி!
நமது சிறப்பு நிருபர்
சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், மற்றொரு மூத்த திமுக தலைவரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி, தவெக அரசை அமலாக்கத்துறை நாடி உள்ளது.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருச்செந்துார் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி தோல்வியை தழுவியதால் மற்ற திமுக நிர்வாகிகள் அனைவரும் அமைதியாகி விட்டனர். எனினும், அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த சில நாட்களாக நன்றி தெரிவிப்பு கூட்டம் நடத்தி, பல்வேறு அரசியல் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தான், சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அவர் மீது வழக்குத் தொடர ஒப்புதல் கோரி, அமலாக்கத்துறை தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. மற்றொரு முக்கியப் புள்ளியான முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம் எழுதிய ஐந்து நாட்களுக்குப் பிறகு, இந்தக் கடிதம் வந்துள்ளது.
தமிழக அரசு அந்தக் கடிதங்கள் இரண்டையும் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தியிருப்பதாகவும், ஆனால் இதுவரை அவற்றுக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமலாக்கத்துறை அனுப்பிய அந்த நான்கு பக்க கடிதத்தில், 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா'வின் (BNSS) பிரிவு 218-ஐச் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, கடிதம் பெறப்பட்ட 120 நாட்களுக்குள் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்படாவிட்டால், அந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாகவே கருதப்படும் என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரத்யேக வீடியோ!
திமுகவுக்கு பேரிடி; இறங்கி செய்யும் அமலாக்கத்துறை; சிக்கலில் திமுக மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து பிரத்யேக வீடியோ தினமலர் யூடியூப், வெப்சைட் உள்ளிட்டவற்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=NIELDrNWnss
வாசகர் கருத்து (29)
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
23 மே,2026 - 18:40 Report Abuse
தவறு செய்தோரை தண்டிக்க அனுமதி எதற்கு? நீதிமன்றம் வழக்கை எடுத்துக் கொண்டாலே போதும் என்று சட்டத்தை மாற்ற வேண்டும். 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
23 மே,2026 - 17:50 Report Abuse
தயவு செய்து திமுக தலைவர்களை சிறையில் வைத்து சிறையை அசிங்கப்படுத்தவேண்டாம். அவர்களை தவறு கண்டேன் சுட்டேன் என்று செய்து மேலே சொர்க்கத்தில் உள்ள ஒரு தனி திமுக நரகத்திற்கு அனுப்பவும். உலகிலேயே பாவம் / தவறு செய்பவர்களின் மிக அதிக ஜனத்தொகையாக திமுக உள்ளதால் கடவுள் திமுக நரகம் என்று தனியான ஒரு நரகத்தை ஆரம்பித்திருக்கின்றார். 0
0
Reply
ஜெகதீசன் - ,
23 மே,2026 - 17:11 Report Abuse
குறைந்தபட்சமாக நாலைந்து மாஜி அமைச்சர்கள் சிறை செல்லனும். கோர்ட் கண்டிப்புடன் செயல்படனும். 0
0
Reply
Raghavan - chennai,இந்தியா
23 மே,2026 - 16:17 Report Abuse
0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
23 மே,2026 - 15:42 Report Abuse
திமுக கிட்டேந்து காங்கிரஸ் கழண்டுக்கிடுச்சு. அதனால பாஜக திமுக கூட்டணி உருவாக்கவரைக்கும் இந்த ரெயிடு எல்லாம் தவிர்க்க முடியாது. 0
0
Reply
Narasimhan - Manama,இந்தியா
23 மே,2026 - 14:23 Report Abuse
இவனுக கொள்ளையடித்தது கொஞ்சமா நஞ்சமா? ஒன்றும் நடக்கப்போவதில்லை. போக வேண்டிய இடத்துக்கு கட்டிங் சென்றவுடன் வழக்கு முடித்து வைக்கப்படும் 0
0
Reply
Abdul Rahim - Karaikudi,இந்தியா
23 மே,2026 - 13:38 Report Abuse
கொஞ்ச நஞ்ச பேச்சாய்யா பேசுன நீ
..... 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
23 மே,2026 - 13:12 Report Abuse
காங்கிரசை குறை செல்லிங் வாய மூடல் ... பாசக்க வாய்க்கரிசி போடுதே ...... 0
0
Reply
Naga Subramanian - Kolkatta,இந்தியா
23 மே,2026 - 13:00 Report Abuse
இவரது முகத்தைப் பார்த்தாலே புரிகிறது, எவ்வ்ளவு நல்லவரென்று. 0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
23 மே,2026 - 12:58 Report Abuse
ஜோசப் : நீயும் நானும் ஒன்னு,ED வாயில மண்ணு 0
0
Reply
மேலும் 19 கருத்துக்கள்...
மேலும்
-
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் சுட்டுக்கொலை
-
நீண்டகால இலக்குகளில் கவனம் செலுத்தும் தலைவர்கள் மோடி, டிரம்ப்; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் புகழாரம்
-
சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர சுவாமிகள் நேபாளத்தில் யாத்திரை
-
வேலுமணி அழைப்பை தவிர்த்த அமித்ஷா
-
பலமுனை தாக்குதல்; சிக்கலான பாதையில் நாடு! இது, மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!
-
3 மகன்களுடன் மாயமான தாய் போலீசார் விசாரணை
Advertisement
Advertisement