15 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று  கிடைச்சாச்சு!

கோவை: கோவை மாவட்டத்தில் , 15 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புதிதாக  ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக,  மொத்தம் 20 போலீஸ் ஸ்டேஷன்கள் இப்பட்டியலில் இணைந்துள்ளன. 

பொதுமக்களுக்கு தரமான, விரைவான  சேவை அளித்தல்,  போலீஸ் ஸ்டேஷன்  நிர்வாகம்,  புகார் பராமரிப்பு, ஆவண மேலாண்மை, சுத்தம், பொதுமக்கள் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில்  இச்சான்று வழங்கப்படுகிறது. 

அதன்படி,  ஆனைமலை, வால்பாறை, பேரூர், கே.ஜி.சாவடி, மதுக்கரை, காருண்யா நகர், ஆலந்துறை, தொண்டாமுத்துார், செட்டிப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கோமங்கலம், சிறுமுகை, நெகமம், கருமத்தம்பட்டி மற்றும் வடக்கிப்பாளையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் ஐ.எஸ்.ஓ., சான்று பெற்றுள்ளன. 

புதிதாக ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்ற போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுக்கு, நேற்று வரை பொறுப்பு வகித்த கோவை எஸ்.பி., கார்த்திகேயன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். 

Advertisement