புதிய கிழக்கு இந்திய கம்பெனிகளாகும் பன்னாட்டு நிறுவனங்கள்:ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை
புதுடில்லி: '' கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் போன்றவை நவீன காலத்தில் கிழக்கு இந்திய கம்பெனிகளாக மாறும் அபாயம் உள்ளது என ஸோகோ நி றுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: மலிவான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்துவிட்டு, மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை இறக்குமதி செய்வது தான் கிழக்கு இந்திய கம்பெனியின் அடித்தளமாக அமைந்தது என்பது வரலாறு. இதன் தாக்கம் நமக்கு எப்படி அமைந்ததுஎன்பது நமக்கு தெரியும்.
நமது மலிவான மூலப்பொருட்களை வேறொருவரிடம் ஒப்படைக்கிறோம். பிறகு அந்த பொருளின் மதிப்பு கூட்டல் நடைமுறைகள் அனைத்தும் வேறொரு இடத்தில் நடந்து அவற்றை நாம் இறக்குமதி செய்தால், அதுதான் காலனித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம். இதனை பின்பற்றி தான் கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவை ஆதிக்கம் செய்தது.
இதேபோன்றுனா கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள், புதிய கிழக்கு இந்திய நிறுவனங்களாக மாறும் அபாயம் உள்ளது. அந்த அபாயம் குறித்து நாம் அறிந்து வைத்து இருக்க வேண்டும். இது கற்பனை கிடையாது. நமது வரலாற்றை பார்த்து நாம் வி ழிப்புடன் இருக்க வேண்டும்.
அது தான் உண்மையான ஆபத்து. அந்த நிறுவனங்களின் உயர்பதவிகளில் ஒரு இந்தியர் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) ஆக உள்ளார் என்ற காரணத்தினால் யாரும் ஏமாற வேண்டும். இது பொருத்தமற்றது. அந்நாட்டில், யாரின் சட்டங்கள், இறையாண்மை, அதிகார வரம்பு நடைமுறையில் உள்ளன என்பதே முக்கியம். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறினார்
உண்மை
இவுரு போய் அமெரிக்காவில் சம்பாரிச்சது எந்த இந்தியக் கம்பெனி?
வருமுன் காப்பது மற்றும் எதிர்பார்த்து செயல்படுவது என்பது வெகுவாக குறைந்துள்ளது...கருத்தை சொன்னால் முதலில் கற்பனை என்றும், அது நடந்த பின்னர், முன்பே ஏன் அடித்து கூறவில்லை? என்றும் பஞ்சாயத்துக்கு வரும் கூட்டம் மிக அதிகம்...திரு.ஸ்ரீதர் வேம்பு அவர்களின் கருத்து தொலைநோக்கு பார்வையில் நிகழக்கூடிய சாத்தியக்கூறுகளை முழுமையாக கொண்டது என்பதே உண்மை..
pepsi
நேரு குடும்ப காங்கிரஸ் உள்நாட்டு கம்பெனிகளிடம் எதற்கெடுத்தாலும் லைசென்ஸ், பர்மிட் , கோட்டா வாங்கணும்ன்னு மிரட்டி தனியார் தொழில்களை வளரவிடாமல் அடித்தது. ராஜிவ் இடஒதுக்கீட்டை கடுமையாக சாடினார். ஆனால் அவரது மாநில அரசுகள் அபாய அளவு இடஒதுக்கீட்டை கொண்டு வந்து திறமைசாலிகளை அன்னிய நாடுகளுக்கு விரட்டின. சோனியா அரசு உலகமயமாக்கல் மூலம் இங்கு அன்னிய பெருநிறுவன ஆதிக்கத்தை பெருக்க உதவியது. ஏகப்பட்ட செலவில் ஐஐடி. களை உருவாக்கியும் கூட இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி பேடன்ட்ஸ் மிகக்குறைவு. இப்போ எல்லாம் போன பிறகு அழுது என்ன பயன்? எல்லாவற்றுக்கும் மோதியைத் திட்டினால் சோகம் பறந்து போகும்.
தெரியும், ஆனா. அறிவுகெட்ட ஜனங்கள் கேட்க்கவேண்டுமே. அயல்நாட்டு பொருட்கள் பின்னாடி ஓடுகின்றனர். உதாரணமாக : பட்டாசு மற்றும் கிரிக்கட் பட்டாசு - அயல் நாட்டின் கண்டுபிடிப்பு கிரிக்கட்- அயல்நாட்டில் விளையாட்டு
நூறு சதவீதம் உண்மை. இன்றைய தலைமுறையினரின் நுகர்வு கலாச்சாரம் வணிக அடிமைத்தனத்தின் சாதக நிலையில் உள்ளது. அர்பன் நக்சல் குரூப் அதனை முன்னெடுத்து வருவதை உணர்ந்து செயல்பட வேண்டும்
உண்மைதான் ஆனால் பிரச்சனைகளை கூறும் பொழுதே அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் கூறி மக்களை நல்வழிப்படுத்தலாமே
அதுக்கு ஊழலற்ற பாஜகவிற்கு ஓட்டு போடணுமே. நாமதான் திருட்டு திமுக போன்ற கட்சிகளுக்கு ஓட்டு போடுறோமே.
True
சரியான கருத்துமேலும்
-
மகளுக்கு பாலியல் தொல்லை கள்ளக்காதலனுடன் தாய் கைது
-
பிடிபட்டது வீட்டிற்குள் புகுந்த பாம்பு
-
அதிக மதிப்பெண்களை அள்ளி வெற்றி பெற்ற அரசு பள்ளிகள்
-
பல்லாரி காங்., கவுன்சிலர் கணவரால் அரசு நிலம் ஆக்கிரமித்து விற்பனை
-
கோவையில் தாய்மார் இறப்பு அதிகம் மாநில சராசரியை மிஞ்சுகிறது
-
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் மப்பேடு சமுதாய நலக்கூடம்