13 கிலோ புகையிலை பறிமுதல்: ஒருவர் கைது

சிவகங்கை:சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் 13 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

சிவகங்கை எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையிலான போலீசார் சமத்துவபுரம் அருகே ரோந்து சென்றனர். அங்கு புகையிலை வைத்திருந்த ஒருவரை பிடித்தனர் அவரிடம் விசாரிக்கையில் நாட்டரசன்கோட்டையில் வாங்கியதாக கூறியுள்ளார். தாலுகா எஸ்.ஐ., செல்வபிரபு தலைமையிலான போலீசார் நாட்டரசன்கோட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். சேக் மஸ்தான் கனி என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். அவரது வீட்டில் 13 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை இருந்ததை கண்டுப்பிடித்தனர். புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் சேக் மஸ்தான் கனியை கைது செய்தனர்.

Advertisement