குட்கா பதுக்கல் இருவர் கைது
செங்கல்பட்டு, மே 24-–
சிங்கபெருமாள் கோவிலில் குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த, இருவரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு –- காஞ்சிபுரம் சாலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு நகர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ‘ஹோண்டா டியோ’ ஸ்கூட்டரில் வந்த நபரை மடக்கி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், நெம்மேலி சாய் லட்சுமி நகரை சேர்ந்த கணேசன், 46; என்பதும், சிங்கபெருமாள் கோவில் மலைமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து குட்கா புகையிலை பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி என்பவரின் வீட்டில் செங்கல்பட்டு போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 2 ஸ்கூட்டர்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
மழைநீர் கால்வாய் அமைப்பதில் அலட்சியம் மர்ம காய்ச்சலால் பெண் பாதிப்பு
-
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
கும்மிடி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடக்கம்
-
வாலாஜாபாதில் சமுதாய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர மக்கள் வலியுறுத்தல்
-
உழந்தை ஏரியை சுற்றி வேலி அமைப்பு
-
ஆகாய தாமரை அகற்றம், கொசு ஒழிப்பில் பின்னடைவு பகிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆறு துாய்மை பணி மந்தம்