தி.மு.க., ஆய்வு குழு வருகை :மாவட்ட செயலாளர் தகவல்

செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் இன்று முதல் 3 நாட்கள் கள ஆய்வு குழுவினர் கருத்து கேட்க இருப்பதாக மாவட்ட செயலாளர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் சட்டசபை தொகுதியில் தேர்தல் குறித்து கள ஆய்வு செய்வதற்காக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் 3 நாட்கள் கள ஆய்வு செய்ய உள்ளனர்.

அதன்படி தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ரவீந்திரன், மாநில மாணவரணி அமைப்பாளர் வீரமணி ஆகியோர் இன்று 24ம் தேதி காலை செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் செஞ்சி தொகுதி நிர்வாகிகளை சந்திக்கின்றனர்.

தொடர்ந்து 25ம் தேதி காலை 10:00 மணிக்கு தீவனுார் ஆர்.எஸ்.மஹால் திருமணம் மண்டபத்தில் மயிலம் தொகுதி நிர்வாகிகளை சந்திக்கின்றனர். 26ம் தேதி காலை 10:00 மணிக்கு திண்டிவனம் சங்கமித்ரா கன்வென்ஷன் ஹாலில் திண்டிவனம் தொகுதி நிர்வாகிகளை சந்திக்கின்றனர்.

அப்போது நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்க இருப்பதால் அந்தந்த தொகுதியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.,

Advertisement