சோழர் பட்டறையில் துாரிகைகளின் திருவிழா கேன்வாசில் கவிதைபாடும் ஓவியங்கள்
பிரெஞ்சுக்காரர்களின் கைவண்ணத்தில் உருவான ஒயிட் டவுன் தெருக்களில் உலா வரும்போது, அந்தப் பழங்காலத்து கட்டடங்களின் அழகே தனி ரகம் தான். ஆனால், இப்போது அந்த பிரெஞ்சுப் பாரம்பரியத்துக்குள், நம் மண்ணின் கலை வாசம் கமகமவென வீசத் தொடங்கியிருக்கிறது.
ஈஸ்வரன் கோவில் அருகில் இருக்கும் ஹெரிட்டேஜ் கட்டடத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் சோழர் பட்டறை கலை அரங்கம், இப்போது புதுச்சேரியின் லேட்டஸ்ட் ஹாட் ஸ்பாட்டாக மாறி இருக்கிறது'. காரணம்... அங்கே முதல்முறையாக அரங்கேறி வரும் பிரம்மாண்ட ஓவியக் கண்காட்சி.
ஆர்ப்பாட்டமே இல்லாத அந்த அமைதியான சூழலுக்குள் நுழைந்தால், சுவர்களில் தொங்கும் ஒவ்வொரு ஓவியமும் நம்மிடம் ஏதோ ஒரு ரகசியம் பேசுகின்றன.
டாப்-5 தூரிகை மன்னர்கள் ஒன்று கூடினால் எப்படி இருக்கும். அதுதான் இந்த எக்ஸிபிஷன். மாடர்ன் ஆர்ட், பாரம்பரிய ஓவியங்கள், எக்கோ-பிரெண்ட்லி படைப்புகள், மனித மனதின் விசித்திரங்களை அலசும் சைக்காலஜிக்கல் சித்திரங்கள் என அரங்கம் முழுக்க வண்ணங்களின் திருவிழா.
முதலில் ஓவியர் கந்தப்பனின் மண் வாசம் ஓவியங்கள். இவருடைய ஓவியங்களின் முன்னால் நின்றால், ஏதோ நம் கிராமத்துத் திருவிழாவிற்குள் நுழைந்தது போன்ற ஒரு பீல். தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அச்சு அசலாகத் தன் துாரிகையால் செதுக்கியிருக்கிறார்.
அடுத்து முனைவர் கோபாலின் 'சைக்காலஜி டச்'. இது என்னவா இருக்கும் என, இளைஞர்களை மண்டையை உடைக்க வைக்கிறது இவருடைய 'மாடர்ன் ஆர்ட்'. மனித மனதின் ஆழமான உளவியல் சிந்தனைகளை 'செம குளாஸாக' கடத்தியிருக்கிறார்.
அப்புறம் ஓவியர் சுகுமாறனின் 'இமேஜினேஷன்'. கற்பனையின் உச்சத்துக்கே அழைத்துச் செல்கின்றன இவரின் உணர்ச்சிப் பூர்வமான படைப்புகள். கலை உலகிற்குள் ஒரு புதிய அனுபவத்தை தேடுபவர்களுக்கு இவருடைய கார்னர் ஒரு வரப்பிரசாதம்.
அடுத்து ஓவியர் ராஜ பெருமாளின் 'கிரீன் சிக்னல்'. இவரை சும்மாவா சுற்றுச்சூழல் ஓவியர்' என்று சொல்கிறார்கள் என்று நினைக்க தோன்றுகிறது. இயற்கையை நேசிங்க பாஸ்... என்பதை இவருடைய பச்சை பசேல் ஓவியங்கள், பார்ப்பவர்களின் நெஞ்சில் அழுத்தமாகப் பதிகின்றன.
அதற்கடுத்து ஜோன்ஸ் இம்மானுவேலின் பிரிரீ ஸ்டைல் ஓவியம். எந்தக் கட்டுப்பாடும் இல்லாத வண்ணங்களின் கலவை. இவருடைய சுதந்திரமான கலை அணுகுமுறை, பார்ப்பவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தி, வாவ்' சொல்ல வைக்கிறது.
இந்த ஓவியம் என் வீட்டு ஹாலில் இருந்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், ஸ்பாட்டிலேயே புக் செய்துவிடலாம். ஆமாங்க, கண்காட்சியில் இருக்கும் அத்தனை ஓவியங்களும் விற்பனைக்கும் தயார் நிலையில் உள்ளன. இதனால் லோக்கல் கலை ரசிகர்கள் மட்டுமின்றி, புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டு விசிட்டர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு ஓவியங்களை அள்ளிச் செல்கிறார்கள்.
புதுச்சேரி கலை உலகிற்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்திருக்கும் இந்த ஓவியக் கண்காட்சி, வரும் ஜூன் 14-ம் தேதி வரை நடக்கிறது. சும்மா வீக்-எண்ட்ல பீச்சுக்கும், தியேட்டருக்கும் போய் போர் அடிச்சவங்க... கொஞ்சம் வித்தியாசமா இந்த சோழர் பட்டறை பக்கம் உங்க பேமிலியோட ஒரு ரவுண்ட் வாங்க. உங்கள் செல்பி கேமராவுக்கு மட்டுமில்ல... உங்க மனசுக்கும் இந்த இடம் செம கலர்புல்லான மெமரியாக இருக்கும்...
@block_B@ நோட் பண்ணிக்கோங்க மக்களே: கடைசி தேதி- ஜூன் 14 இடம்: சோழர் பட்டறை, எண்-18, ஈஸ்வரன் கோயில் அருகில், ஹெரிட்டேஜ் டவுன், ஒயிட் டவுன், புதுச்சேரி.block_B
மேலும்
-
உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல்; ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்
-
47 நாட்கள் முன் மாயமான மாணவர்; மும்பை வீதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சோகம்
-
விசிகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விலகல்
-
தெற்கு ரயில்வேயின் முதல் நுாறு இடங்களில் ராமேஸ்வரம், ராமநாதபுரம் ரயில் நிலையம்
-
அடிப்படை வசதிகள் இன்றி ஆண்டிபட்டி வாரச்சந்தையில் அவதி ஆறு ஆண்டுகளாக முடியாத கடைகள் அமைக்கும் பணி
-
மூடப்பட்ட பாதை திறக்க பொதுமக்கள் கோரிக்கை