செயின்ட் ஆண்டனிஸ் பள்ளி சாதனை 

கடலுார்: செயின்ட் ஆண்டனிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரசு பொதுத்தேர்வில், 26 வது ஆண்டாக சாதனை படைத்தது.

கடலுார், சின்னகங்கணாங்குப்பம் செயின்ட் ஆண்டனிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

மாணவிகள் கீர்த்திகா 600க்கு 564 மதிப்பெண், லோகமித்ரா 536, தர்ஷினி 529 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கணினி அறிவியல் பாடத்தில் மாணவர் ஜீவா, 100 மதிப்பெண்கள் பெற்றார். தமிழ் பாடத்தில் 19 பேர், கணினி அறிவியலில் 15, ஆங்கிலத்தில் 9, உயிரியல் பாடத்தில் 33 பேர், வேதியிலில் ஒருவர், கணினி பயன்பாட்டியல் பாடத்தில் ஒருவரும் 90க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் ஹர்ஷித் 472; மாணவிகள் ஹரிணி 467; நந்தினி 464; மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய, 73 மாணவர்களில் கணித பாடத்தில், 19 பேர், அறிவியலில் 18, தமிழ் பாடத்தில் 17, சமூக அறிவியலில் 9 பேர், 90க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனர். பள்ளி தாளாளர் ஆண்டனிராஜ், சாந்தி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

Advertisement