இளம்பெண்ணை சீண்டிய போதை வி.ஏ.ஓ., சிக்கினார்

அம்மாபேட்டை: சேலம், எருமாபாளையம், ராமானுஜர் மணிமண்டப பகுதியில் வசிப்பவர் பாலகிருஷ்ணன், 42. பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பெரிய கிருஷ்ணாபுரம் வி.ஏ.ஓ.,வாக உள்ளார். நேற்று முன்தினம் பணி முடிந்து, மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார்.

இரவு, 9:00 மணிக்கு, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, உடையாப்பட்டியில், அப்பகுதியை சேர்ந்த, பிளஸ் 2 முடித்த, 17 வயது இளம்பெண், தாய்க்கு மருந்து வாங்க, நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, வி.ஏ.ஓ., 'சாலையை இப்படியா கடப்பது' என கேட்டு, பெண்ணின் கன்னத்தில் அறைந்துள்ளார். நிலைத்தடுமாறி விழுந்த இளம்பெண்ணை சீண்டவே, அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த மக்கள், வி.ஏ.ஓ.,வை சரமாரியாக தாக்கினர். அவர் குடிபோதையில் இருந்தது தெரிந்தது.

அம்மாபேட்டை போலீசார், வி.ஏ.ஓ.,வை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அம்மாபேட்டை மகளிர் போலீசார், 'போக்சோ'வில் பாலகிருஷ்ணனை, கைது செய்தனர்.

Advertisement