மதுபான ஆலைகளின் விதிமீறலுக்கு உடந்தையாக இருந்தால் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
சென்னை: 'மதுபான ஆலைகள் அனைத்தும், விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். விதிமீறல் கண்டறியப்பட்டால், அதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.
தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயல்பாடு குறித்து, சென்னையில் அதிகாரிகளுடன் நேற்று, அமைச்சர் விக்னேஷ் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இதில், துறை ஆணையர் கார்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விக்னேஷ் பேசியதாவது:
மனமகிழ் மன்றங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பதை, மாவட்ட அளவிலான அதிகாரிகள் தணிக்கை செய்து, உறுதிப்படுத்த வேண்டும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை போன்ற நடவடிக்கைகள் முற்றிலும் இல்லாமல், தொடர்ந்து தீவிரமாக கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
மதுபான ஆலைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குவதை, கலால் மேற்பார்வை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள், உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது, உடனே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இப்பத்திக்கி சரக்கு சப்ளை பண்ணுறவங்க யாரு ???? பாலு தாத்தாவா அல்லது ட்டூட்குடி மேடமா ? ஏன்னா பி டீம் களமிறங்கிய எஜமானர்களின் கட்டளைக்கு அடிபணியணுமே ????
இங்கே கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தி ஊரெங்கும் டாஸ்மாக் திறந்து பல ஆயிரம் கோடிகள் கொள்ளையடித்து சம்பாதிப்பது யார் .....அம்பானியா அல்லது அதானியா ??....
The ministry is called prohibition of Alcohol but the ministry is encouraging the sales of Alcohol
இப்படி எச்சரிக்கை விடுத்தாதான் கரைக்டா கமிஷன் வீடு தேடி வரும். மக்களே நீங்க இதையெல்லாம் பார்த்து பழகிவிடுவீங்க
விதிமீறல்கள் செய்யும் மதுபான தொழிற்சாலை உரிமையாளர்களிடம் நேரடியாக இவர் டீலிங் பார்த்துக் கொள்வாரோ? நோ அதிகாரிகளின் ஊடுருவல் no interference .
விசை ஆட்சியில் பாட்டிலுக்கு 30 ரூபாய் என்று ஆனது குறையுமா என்று குடிகாரர்கள் குமுறுகிறார்கள். மூடப்பட்டதாக பட்டியலிடப்பட்ட பல கடைகள் இன்னும் இயங்குவதாக செய்தி வருகிறது. ஆக இதுவும் ஒரு போட்டோ ஷூட் ஆட்சி போலத்தான்.
டாஸ்மாக்கில் எல்லா பிராண்ட் சரக்கும் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாட்டிலுக்கு அதிகம் வாங்க கூடாது
வர வேண்டிய வருமானத்தை உறுதி செய்கிறார்.அரசுக்கு என்று படிக்கவும்.
கடந்த ஆட்சியில் மதுபான ஊழல் வழக்கை விசாரிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றமே சென்று தடை பெற்றதை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் .மதுபான ஊழலை சிபிஐ விசாரிக்க உதிரவிட்டால் பல ஆயிரம் கோடிகள் வசூலிக்க வழியுண்டு .
New broom sweeps well. . ஆங்கிலத்தில் இப்படியொரு பழமொழி. வீட்டிற்கு வந்த புதியமருமகள் இப்படித்தான் சுறுசுறுப்பாகயிருப்பாள். இதை அன்று 1967- ல் முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம் திமுக புதிய ஆட்சிப் பொறுப்பேற்று வந்தபோது சொன்னது. இனி போகப் போகத்தான் தெரியும் தவெக என்ற புதிய ஆட்சியின் பூவின் வாசனை எப்படி எவ்வளவுக் காலம் இருக்குமென்று. இவர்கள் ஊழலுக்கும் விதிமீறல்களுக்கும் உடைந்தையாக இருப்பார்களா இல்லையாவென்றும் அப்போது தெரியும்.
No good sweep by new daughter in-law. The minister beating the bush not the animal. Liquor market to be ed to all liquor manufacturers in India. Why DMK/ADMK owned liquors alone. TASMAC must sell all brands of liquors produced in India according to customers needs. . This type of buying arragement, again minimum rs 10 per bottle as commosion will go out side including excise payable to govt.மேலும்
-
எத்தனாலில் இயங்கும் கார் அறிமுகம் செய்கிறது மாருதி நிறுவனம்: நிதின் கட்காரி தகவல்
-
தாமஸ் ஆல்வா எடிசனை மிஞ்சிய இந்திய விஞ்ஞானி : அமெரிக்காவில் சாதித்து காட்டி அசத்தல்
-
நாட்டில் கருவுறுதல் விகிதம் சரிவு; தமிழகம், கேரளாவில் முதியோர் விகிதம் அதிகரிப்பு
-
பால் பணியாரம்
-
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்
-
கோவையில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு விஜய் போனில் ஆறுதல்