'தமிழகத்தில் நடந்திருப்பது சினிமா சுனாமி'
சென்னை: ''தமிழகத்தில் நடந்திருப்பது அரசியல் சுனாமி அல்ல;சினிமா சுனாமி. எனவே, தமிழக வெற்றிக் கழக அரசு ஐந்தாண்டுகள் நீடிக்காது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்த, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:
சினிமா கவர்ச்சியால், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராகியுள்ளார். இந்த தேர்தலில் நடந்திருப்பது அரசியல் சுனாமி அல்ல; சினிமா சுனாமி. நிச்சயமாக த.வெ.க., அரசு ஐந்தாண்டுகள் நீடிக்காது.
புதிய பொம்மையை பார்த்தால், வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைக்கு, அது இரண்டு நாட்களில் அலுத்து விடும்.
பொம்மை வேண்டும் என்பதுபோல, நடிகரை பார்த்து சென்ற தமிழக மக்கள், தாயிடம் வருவது போல தி.மு.க.,விடம் திரும்பி வருவர்.
தி.மு.க.,வின் தோல்விக்கு பெரும்பான்மையான மக்கள் வருத்தப்படுகின்றனர்.
தி.மு.க., எனும் பேரியக்கத்திற்கு இளைஞர்களே எதிர்காலம். காலத்திற்கேற்ப தி.மு.க.,வின் திட்டத்தையும், செயல்முறையையும் மேலும் மேம்படுத்த வேண்டும்.
சமூக வலைதளங்களை திறம்பட பயன் படுத்துவோம். இளைஞர்களிடம் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அடுத்த எலேச்டின் எலெக்ஷன் உள்ள பரத் மாதிரி ஆயிருவாரு
தினமும் புது கதறல் 234 லும் நமதே என ஆணவத்துடன், அகந்தை யுடன் சொன்னது நல்லா ஆப்பு அடித்து உட்கார வைத்தது. இன்னும் திமிர் அடங்க வில்லை போல.
திமுக 1967 மற்றும் 1971 தேர்தல்களில் யார் தயவால் வெற்றி பெற்றது என்று பின்னோக்கி பாருங்கள். உண்மை புலப்படும். எம்ஜிஆர் என்ற ஆளுமை முன்னிறுத்தப்பட்டு திமுக அத்தேர்தல்கலில் வென்றது உண்மை. அப்போது திமுக வென்றது எம்ஜிஆர் சுனாமி என்று ஏற்றுக்கொள்வீரா?
நீதானே தினமும் ஷூட்டிங் நடத்தினாய். கரும்பு வயலுக்கு நடுவில் சிமெண்ட் பாதை, கண்மாயில் சிவப்பு கம்பளம்.......... ஒன்றா, இரண்டா?
சென்ற இடங்களில் எல்லாம் மக்களின் எழுச்சி, எழுச்சி என்று நீங்களாகவே சொல்லிக் கொண்டீர்களே, அது இது தானா, கோபால்?
Appa unnaduyya poulla udaiyanaithi yarru???மேலும்
-
உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல்; ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்
-
47 நாட்கள் முன் மாயமான மாணவர்; மும்பை வீதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சோகம்
-
விசிகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விலகல்
-
தெற்கு ரயில்வேயின் முதல் நுாறு இடங்களில் ராமேஸ்வரம், ராமநாதபுரம் ரயில் நிலையம்
-
அடிப்படை வசதிகள் இன்றி ஆண்டிபட்டி வாரச்சந்தையில் அவதி ஆறு ஆண்டுகளாக முடியாத கடைகள் அமைக்கும் பணி
-
மூடப்பட்ட பாதை திறக்க பொதுமக்கள் கோரிக்கை