அதிக மதிப்பெண்களை அள்ளி வெற்றி பெற்ற அரசு பள்ளிகள்
கோவை: நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தர்சன கமலி 500க்கு 497 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
மாணவி தமிழில் 99, ஆங்கிலத்தில் 98, கணக்கு, அறிவியல், சமூக அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தலைமையாசிரியர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவியை வாழ்த்தினர்.
காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 162 மாணவர்களில் 157 பேர் தேர்ச்சி பெற்றும், 97 சதவீதம் பேர் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.
இந்த பள்ளியின் மாணவி தனுஸ்ரீ 500க்கு 496 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் தமிழில் தமிழில் 99, ஆங்கிலத்தில் 99, கணிதம் மற்றும் அறிவியலில் 100, சமூக அறிவியலில் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவியை தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் பாராட்டினார்.
மாவட்ட மாடல் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய தக்சன்யா என்ற மாணவி 494 மதிப்பெண் எடுத்துள்ளார்.
இவர் தமிழில் 97, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மாணவியை தலைமையாசிரியர் பரிமளாதேவி வாழ்த்தினார்.
அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில முதன்முறையாக 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவி வீரலட்சுமி, 500க்கு 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதலிடம் பிடித்துள்ளார். 41 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும்
-
மின்வெட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கணும்; இபிஎஸ்
-
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஒரு திருப்புமுனை ஏற்படும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
நீங்கள்தான் அடுத்த பிரதமர்; ராகுலை குஷிப்படுத்திய பிரசாந்த்!
-
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் சுட்டுக்கொலை
-
நீண்டகால இலக்குகளில் கவனம் செலுத்தும் தலைவர்கள் மோடி, டிரம்ப்; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் புகழாரம்
-
சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர சுவாமிகள் நேபாளத்தில் யாத்திரை