பிளஸ் 2 தேர்வில் கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

கரூர்:கரூர், வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவன் தாணுபவன், 600க்கு 594 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் முதலிடம் பெற்றுள்ளார். மாணவியர் தனுஷ்மதி, விஷ்ணு பிரியா, 600க்கு தலா, 588 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளனர். மாணவர் மதியரசு, 600க்கு, 579 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளார்.

தேர்வு எழுதிய, 148 மாணவர்களில், 550 மதிப்பெண்களுக்கு மேல், 11 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல், 30 மாணவர்களும் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில், 100க்கு, 99 மதிப்பெண்களை, 10 மாணவர்களும், ஆங்கிலத்தில், 99 மதிப்பெண்களை ஒரு மாணவியரும், கணினி அறிவியலில், இரண்டு மாணவர்கள், 100 மதிப்பெண்களும், வணிகவியலில், 100 மதிப்பெண்களை, இரண்டு மாணவர்களும், வணிக கணிதத்தில், 100 மதிப்பெண்களை ஒரு மாணவரும் பெற்றுள்ளனர். பள்ளியின் சராசரி மதிப்பெண், 455யாக உள்ளது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் ஆர்த்தி ஆர்.சாமிநாதன், செயலாளர் அரோமா பி.சாமிநாதன், பள்ளி ஆலோசகர்கள் பழனியப்பன், நல்லசாமி, தர்மலிங்கம், பள்ளி முதல்வர் சுகுமார் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் சால்வை அணிவித்து பரிசு பொருட்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement