நீண்டகால இலக்குகளில் கவனம் செலுத்தும் தலைவர்கள் மோடி, டிரம்ப்; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் புகழாரம்

புதுடில்லி: பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் நீண்டகால இலக்குகளில் கவனம் செலுத்தும் இரண்டு தீவிரமான தலைவர்கள் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பாராட்டியுள்ளார்.

இந்தியா வந்துள்ள மார்கோ ரூபியோ டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
அமெரிக்க-இந்திய உறவுகள் வலுப்பெற்று வருகிறது. பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் இடையேயான தொடர்பை நீங்கள் எளிதாகக் காணலாம். தலைவர்களுக்கு இடையேயான தொடர்பு மிகவும் முக்கியமானது. இவர்கள் இருவரும் குறுகிய காலத்தை மட்டுமல்ல, நீண்டகால இலக்குகளில் கவனம் செலுத்தும் தலைவர்கள்.

முதல் ஆட்சிக்காலத்தில் அதிபர் டிரம்புக்கு இங்கு வருகை தரும் வாய்ப்பு கிடைத்த காலத்திலிருந்தே இருந்துவரும் ஒரு தனிப்பட்ட உறவாகும்; அது இரண்டாவது ஆட்சிக்காலத்திலும் தொடர்கிறது. இருநாட்டு தலைவர்களுக்கு இடையான தனிப்பட்ட உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இருநாட்டு உறவை வலுப்படுத்துவதில் இந்த நெருங்கிய உறவு தான் முக்கியமானதாகும். இவ்வாறு மார்கோ ரூபியோ கூறினார்.

Advertisement