வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் சுட்டுக்கொலை
வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகை வெளிப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ரகசிய பிரிவு போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
அமெரிக்கா அதிபர் டிரம்ப், தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போதும், அதிபராக பதவி ஏற்ற பிறகும் அவரை கொல்வதற்கு சதி நடந்துள்ளது.
பிரசாத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
அதுமட்டுமின்றி கடந்த ஏப்ரல் 25ம் தேதி டிரம்பை கொல்ல முயற்சி நடந்தது. குற்றவாளியை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது ஒருமாதத்திற்குள் மீண்டும் ஒருமுறை டிரம்பை கொல்ல முயற்சி நடந்துள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியை நோக்கி ஆயுதங்களுடன் வந்த நபர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த ரகசிய போலீஸ் படையினர் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதல் பலத்த காயம் அடைந்த அவரை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடந்த போது, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்ததாகவும், சண்டையில் அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரகசிய பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
இனிமேலாவது டிரம்ப் மற்றநாட்டு விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது.
உள்ளே போடுங்கள் ..மேலும்
-
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஒரு திருப்புமுனை ஏற்படும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
நீங்கள்தான் அடுத்த பிரதமர்; ராகுலை குஷிப்படுத்திய பிரசாந்த்!
-
நீண்டகால இலக்குகளில் கவனம் செலுத்தும் தலைவர்கள் மோடி, டிரம்ப்; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் புகழாரம்
-
சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர சுவாமிகள் நேபாளத்தில் யாத்திரை
-
வேலுமணி அழைப்பை தவிர்த்த அமித்ஷா
-
பலமுனை தாக்குதல்; சிக்கலான பாதையில் நாடு! இது, மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!