பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்
நமது நிருபர்
பாகிஸ்தானில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் குவெட்டாவில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில் தண்டவாளத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்ததில் ரயிலின் ஒரு பெட்டி முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது. அருகிலுள்ள வீடுகள் மற்றும் வாகனங்களும் பலத்த சேதம் அடைந்துள்ளது.
தடைசெய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. குவெட்டா கண்டோன்மென்ட்டிலிருந்து ரயிலில் பயணித்த பாகிஸ்தான் ராணுவத்தினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. மீட்பு ப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்தால், ரயில் தடம் புரண்டதுடன் பெரும் தீ விபத்தும் ஏற்பட்டது.
வாசகர் கருத்து (9)
Rathna - Connecticut,இந்தியா
24 மே,2026 - 18:06 Report Abuse
தீவிரவாத விதையை விதைத்து இப்போது நல்ல அறுவடை. விளைச்சல் மகிழ்ச்சியில் பாகிஸ்தானிய அமைதி வழிக்காரன். 0
0
Reply
Baskaran Ramasamy - CHENNAI,இந்தியா
24 மே,2026 - 16:15 Report Abuse
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
குறளின் விளக்கம்:ஒருவர் மற்றவர்களுக்கு முற்பகலில் துவக்க காலத்தில் துன்பமான செயல்களைச் செய்தால், அந்தச் செயல்களின் விளைவாகப் பிற்பகலில் அடுத்த கணமே தாமே வலிய வந்து அவரைத் துன்பங்கள் சேரும். நாம் செய்யும் நல்வினை அல்லது தீவினைக்கேற்ப பலன் உறுதியாக வந்து சேரும் என்பதை இக்குறள் உணர்த்துகிறது. 0
0
Reply
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
24 மே,2026 - 15:56 Report Abuse
நம் பாரத தேசம் பிளவு படுவதற்கு முன் நடந்த தேர்தலில் இன்றைய இந்தியாவில் உள்ள தமிழகம் கேரளா உட்பட அனைத்து மாநிலத்தை சேந்த இஸ்லாமியகள் பாரதம் பிளக்கப்பட்டு பாகிஸ்தான் உருவாக வேண்டும் என ஓட்டு போட்டனர் ஆனால் பலுஜிஸ்தான் மாகாணத்தில் நாடு பிளக்க கூடாது என ஓட்டு போட்டனர் ஆனால் துரதிஷ்டம் இங்குள்ள பாகிஸ்தான் விஸ்வாச ஜிகாதிகள் பாகிஸ்தான் செல்ல வில்லை பலுஜிஸ்தானை சேந்த நமது சகோதர சகோதரிகள் நேரு செய்த வரலாற்று தவறால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் சென்று விட்டார். பலுஜிஸ்தானை நம்முடன் இணைக்க வேண்டும் அல்லது தனி மதசார்பற்ற நாடாக வேண்டும். பலுஜிஸ்தான் சகோதரர்களுக்கு வாழ்த்துகள் நமது RAW வை சேந்த தேசபக்தர்களுக்கும் வாழ்த்துகள் இறைவனும் துணை ஆசிர்வாதம் என்று உங்களுக்கு இருக்கும் 140 கோடி மக்களும் உங்களுக்கு கடமை பட்டுள்ளோம். ஜெய் ஹிந்த். 0
0
Reply
SUBBU,MADURAI - ,
24 மே,2026 - 14:54 Report Abuse
நான் முன்பே சொன்னது போல்
இல்லாமல் .... செய்த ஏற்பாடு மிகவும் தாமதமாக இப்போதுதான் செயற்பாட்டுக்கு வந்துள்ளது எனவே நம் ஆழ்ந்த அணுதாபங்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்துக் கொள்வோம். 0
0
Reply
சினிமா சுனாமி - mumbai,இந்தியா
24 மே,2026 - 13:55 Report Abuse
ஏற்கனவே ஜாபர் எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள் . 0
0
Reply
SUBBU,MADURAI - ,
24 மே,2026 - 13:51 Report Abuse
Nova Musical Festival (Israel) 7th Oct 2023 Islamic terrorist killed innocent jews. Pahalgam Baisaran Meadows 22nd April 2025 Islamic terrorist killed innocent Hindus India and Israel share same pain.... 0
0
Reply
rajasekaran - neyveli,இந்தியா
24 மே,2026 - 13:24 Report Abuse
இறந்தவர்களுக்கு இறப்புக்கு காரணமாக இருந்தவர்களும் அமைதி மார்க்கத்தை சேர்ந்தவர்கள். 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
24 மே,2026 - 13:12 Report Abuse
கத்தியெடுத்தவன் ...... 0
0
Reply
ஜெகதீசன் - ,
24 மே,2026 - 13:06 Report Abuse
பாகிஸ்தான் மூன்றாக உடைய நிறைய வாய்ப்புள்ளது. தீவிரவாதத்தை வளர்த்த நாடு, அதனாலேயே அழியும். 0
0
Reply
மேலும்
-
உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல்; ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்
-
47 நாட்கள் முன் மாயமான மாணவர்; மும்பை வீதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சோகம்
-
விசிகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விலகல்
-
தெற்கு ரயில்வேயின் முதல் நுாறு இடங்களில் ராமேஸ்வரம், ராமநாதபுரம் ரயில் நிலையம்
-
அடிப்படை வசதிகள் இன்றி ஆண்டிபட்டி வாரச்சந்தையில் அவதி ஆறு ஆண்டுகளாக முடியாத கடைகள் அமைக்கும் பணி
-
மூடப்பட்ட பாதை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
Advertisement
Advertisement