தெற்கு ரயில்வேயின் முதல் நுாறு இடங்களில் ராமேஸ்வரம், ராமநாதபுரம் ரயில் நிலையம்

ராமநாதபுரம்:தெற்கு ரயில்வேயின் 2025--26 நிதியாண்டிற்கான அதிக வருவாய் ஈட்டும் முதல் நுாறு ரயில் நிலையங்களின் பட்டியலை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மூன்று ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் முக்கிய புன்னிய தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து 2025-26 நிதியாண்டில் 36.63 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.56.24 கோடி பெற்று 30 வது இடத்தில் உள்ளது. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து 23.70 லட்சம் பேர் பயணித்தன் மூலம் ரூ.21.49 கோடியும். பரமக்குடி ரயில் நிலையத்தில் இருந்து 16 லட்சம் பேர் பயணித்ததன் மூலம் ரூ.11.09 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மொத்தமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மட்டும் ரயில்வே துறை கடந்த ஆண்டில் ரூ.94.50 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 2024--25 நிதியாண்டில் ரூ.59.27 கோடி வருவாய் ஈட்டிய நிலையில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் தெற்கு ரயில்வேயின் அதிக வருவாய் ஈட்டும் முக்கிய ரயில் நிலையங்களின் பட்டியலில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து ரயில்வே பயணிகள் சங்கத்தினர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் மூலம் ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைத்தும் போதிய வசதிகள் செய்து தருவதில்லை. கிழக்கு கடற்கரை ரயில் திட்டத்தை செயல்படுத்தினால் இந்த வருவாய் இருமடங்காகும். அதுபோல் பரமக்குடியில் சரக்கு ஏற்றும் சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றனர். ---

Advertisement