முட்டை கொள்முதல்; திமுக செய்த தவறை செய்யக்கூடாது; தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
சென்னை: பள்ளி மாணவர்களுக்காக கொள்முதல் செய்யப்படும் முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை குறித்து தமிழக அரசு கடுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை; தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ரூ.5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ரூ.3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, குறைந்த விலைக்கு பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.
கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை அல்ல. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும்.
எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதிரி ஊழல்களுக்கு சைனாவில் தூக்கு தண்டனை விதிக்கிறார்கள். யாருக்கு தண்டனை என்றால் ஊழல் ஒப்பந்தம் செய்து கொண்ட உயர் அதிகாரிகளுக்கு.
பல குழந்தைகளின் உயிர் பாதிக்கப்படலாம். ஏன் என்றால் மாமிச மற்றும் சைவ உணவை சில நாட்களுக்கு மேல் சேமித்தால் அது விஷமாகி விடும்.
முட்டை விலையை மாதந்தோறும் விலைப்புள்ளி கோரி, நிர்ணயம் செய்ய வேண்டும். வருடம் ஒருமுறை டெண்டர் என்பது ஊழலுக்கே வழி வகுக்கும். ஏழை எளிய மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, அரசின் கவனத்திற்கு இதனை எடுத்துச் சென்ற அண்ணாமலை, மிகவும் பாராட்டுக்கு உரியவர் ஆவார்.
Expiry date should be printed using ink on each egg
தாங்கள் மிகவும் அறிந்த, பொது மக்கள் மிகவும் எதிர்பார்க்க கூடிய ஆனால் முதலாளிகளுக்கு பிடிக்காத ஒரு பிரச்சினையை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதனால் 95% மக்கள் பாராட்டுவார்கள் . 5% மக்கள் எதிர்ப்பார்கள். இது சுயநிதி கல்லூரிகளின் சேர்க்கை சம்மந்தப்பட்டதுதான் . நிர்வாக ஒதுக்கீடு 50% சதவீதம் முழுவதையும் அல்லது அதில் பாதிக்கும் மேல் 30%ஐ அரசே கவுன்சிலிங் மூலம் நிரப்பவது.
இதனால் பல ஆயிரக்கனக்கான நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெருவர் . தங்களின் வாழ் நாள் சம்பாத்தியத்தை ஒரே நாளில் இழக்கமாட்டார்கள். நிர்வாகமும் நிர்வாக ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்துள்ள கூடுதல் கட்டணங்களை பெற்றுக்கொள்வதோடு 20% சதவீத இடங்களை நிரப்ப கூடுதல் தொகையை பெற்றுக்கொள்ளட்டும் .
இது சம்மந்தமாக பேச தைரியமான தலைவர்கள் யாரும் இல்லை. எனவே இது சம்மந்தமாக நீங்கள் ஒரு அறிக்கை விடவேண்டும் என பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
சூப்பர் அண்ணாமலை அவர்களே. இதைப்போல் இந்த ஆட்சிக்கு தகுந்த அறிவுரை கூறி நல்ல விதமாக நடக்க நீங்கள் பக்கபலமாக இருக்கவும். வாழ்த்துக்கள்.
மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கி பணத்தை வரவு வைக்கலாம் ... நடுவில் கான்டராக்டர் தேவையில்லை
அரசில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை.
கடைசிவரை tamilan கும்மிடிப்பூண்டி தாண்ட மாட்டான்
எவ்வளவு வசதிகளைப்பெற்று அனுபவித்தார்?.மேலும்
-
மக்கள் தொகையில் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு; மத்திய அரசின் நடவடிக்கைக்கு சசி தரூர் ஆதரவு
-
பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் விஜய்; தமிழக நலன்கள் குறித்த கோரிக்கை மனு சமர்ப்பிப்பு
-
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை முன்னேற்ற சிறப்புப் பயிற்சி: கலெக்டர் அறிவுரை
-
சாலையில் பள்ளத்தால் விபத்து அபாயம்
-
சரக்கு வாகனம் ஆம்புலன்சில் மோதி விபத்து: ஒருவர் பலி
-
ஊருணி கரையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிய கிராம மக்கள்