அதிமுகவில் தொடங்கியது சமாதானப்படலம்; இபிஎஸ் இடம் சரண் அடைந்தது வேலுமணி கோஷ்டி
சென்னை: அதிமுக கோஷ்டிகள் இடையே ஏற்பட்டிருந்த மோதல் நீங்கி, இன்று இரு தரப்பும் ஒன்றாக இணைந்தனர். எனினும், 3 எம்எல்ஏ.,க்கள் மட்டும் இந்த இணைப்புக்கு வரவில்லை.
தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க., 59; அ.தி.மு.க., 47 தொகுதிகளிலும் வென்றன.தேர்தல் தோல்வி விரக்தியால் அதிமுகவில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் 22 பேர்; முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையிலான அணியில் 25 பேர் என, இரண்டு அணியாக கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பிரிந்தனர்.
இதற்கிடையே அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்து ஆளும் கட்சியான தவெக பக்கம் சாய்ந்தனர். தங்கள் தரப்பு பலவீனம் அடைய தொடங்கியதை உணர்ந்த வேலுமணி தரப்பு எம்எல்ஏ.,க்கள் ஒவ்வொருவராக இபிஎஸ் பக்கம் சாயத் தொடங்கினர்.
நிலைமை விபரீதம் ஆன நிலையில் வேலுமணி தரப்பினர் இறங்கி சமாதானத்துக்கு வந்தனர். இன்று வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இபிஎஸ் வீட்டுக்கு சென்று பேச்சு நடத்தினர்.
இதையடுத்து இரு அணிகளும் ஒன்றாக இணைந்ததாக எம்எல்ஏ.,க்கள் கூறினர். இந்த இணைப்புக்காக, சி.வி.சண்முகம், புவனகிரி அருண்மொழி தேவன், விராலிமலை விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இபிஎஸ் வீட்டுக்கு வரவில்லை. இரு தரப்பினர் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது பற்றி இன்று மதியம் அதிமுக தலைவர்கள் பேட்டி அளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

@block_G@
நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏ.,க்கள், இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களுடன் இணைந்து சபாநாயகரை சந்தித்தனர். தகுதி நீக்க நடவடிக்கை வேண்டாம் என்று கோரி கடிதம் அளித்தனர். சட்டசபை குழு தலைவராக இபிஎஸ், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அங்கீகரிக்கும் வகையில் சபாநாயகரிடம் அதிமுக எம்எல்ஏ.,க்கள் இணைந்து கடிதம் அளித்தனர்.block_G
நல்லா இருக்கு நவீன யுக்தி
இனி சபாநாயகருக்கு வேலை இருக்காது.
நல்லது. விஜயிடமும் இல்லை எடபடியிடமும் இல்லை என்று திரிசங்கு சொருகத்தில் நின்றால், சிபிஐ கபளீகரம் செய்து விடும். இது அந்த பிரிவினை கோஷ்டிக்கு நன்றாக தெரியும்.
ஒன்று பட்டு ? என்ன கிழிக்க போகிறது அதிமுக ?
அந்த லாட்டரி அம்மணி இன்னொரு சசிகலாவாக உருவெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .. ச
அதிமுக தலைமை இடம் மீண்டும் இவர்கள் சரணடைந்து விட்டதால் இவர்களுக்கு இனி சொந்த கட்சியிலேயே மரியாதை இருக்காதே
இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொல்லயுமா அலையனும்
ஒன்றுபட்டால் ஒண்டு வாழ்வு . எடப்பாடியார் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் .எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுக்காதீர்கள் .மன்னிப்பது இறைகுணம் .
இந்த சமாதான கூட்டத்திற்கு வராதவர்கள் தவெக செல்ல வாய்ப்பு உள்ளது.
நல்ல சுழி உள்ளது போலும். எதிர்ப்பவர்கள் எல்லாம் அதோகதியாகி விடுகிறார்கள். கடைசியில் காலிலே போய் விழுகிறார்கள்.மேலும்
-
மக்கள் தொகையில் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு; மத்திய அரசின் நடவடிக்கைக்கு சசி தரூர் ஆதரவு
-
பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் விஜய்; தமிழக நலன்கள் குறித்த கோரிக்கை மனு சமர்ப்பிப்பு
-
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை முன்னேற்ற சிறப்புப் பயிற்சி: கலெக்டர் அறிவுரை
-
சாலையில் பள்ளத்தால் விபத்து அபாயம்
-
சரக்கு வாகனம் ஆம்புலன்சில் மோதி விபத்து: ஒருவர் பலி
-
ஊருணி கரையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிய கிராம மக்கள்