கோவை சிறுமி கொலை வழக்கு; 2 பேர் மீது குண்டாஸ்
கோவை: கோவை சூலுார் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவையில், 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு விரைவாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய சோதனையில் சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக், நண்பர் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் போக்சோ மற்றும் கடத்தல் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் கார்த்திக் தப்பிச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் கை, கால்களில் முறிவு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான்.
மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று (மே 27)
மோகன்ராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐ ஜி ரம்யா பாரதி பரிந்துரையின் பெயரில் மாவட்ட கலெக்டர் பவன் குமார் உத்தரவிட்டார்.
சம்பந்தம் இல்லாம குண்டாஸ் போடுறீங்க. இது சிறுமி பாலியல் கொடுமை மற்றும் தொலை வழக்கு இதுக்கு போய் குண்டாச. ஏமாற்று வேலை. இந்த கொடுர கொலைக்கு ஜாமீன் கொடுப்பீங்களா.
ரொம்ப லேட் ...... பாபாபுவுக்கு அநீதி செஞ்சவனுக்கு தண்டனை????
தூக்கு தண்டனைய்
இருவருக்கும் மரண தண்டனை தீர்ப்பு வழங்கவேண்டும் என்று காத்துஇருக்கிறோம் அனைவரும்
கீழ் கோர்ட் மேல் கோர்ட் ராஷ்டிரபாதிக்கு விண்ணப்பம் இப்படி பத்து வருடங்களாவது கேஸ் நடக்கலாம்
குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் காலதாமதமின்றி அதிகபட்ச தண்டனை வழங்கி அதை உடனடியாக நிறைவேற்றவேண்டும்.
என்னய்யா அது குண்டாஸ் அது இது என்று? உடனடியாக ஈவு இரக்கம் பார்க்காமல் என்கவுண்டரில் போட்டு தள்ளுங்க ஐயா. சும்மா அவர்களை சிறையில் அடைத்து தண்ட செலவு செய்துகொண்டு.மேலும்
-
மக்கள் தொகையில் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு; மத்திய அரசின் நடவடிக்கைக்கு சசி தரூர் ஆதரவு
-
பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் விஜய்; தமிழக நலன்கள் குறித்த கோரிக்கை மனு சமர்ப்பிப்பு
-
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை முன்னேற்ற சிறப்புப் பயிற்சி: கலெக்டர் அறிவுரை
-
சாலையில் பள்ளத்தால் விபத்து அபாயம்
-
சரக்கு வாகனம் ஆம்புலன்சில் மோதி விபத்து: ஒருவர் பலி
-
ஊருணி கரையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிய கிராம மக்கள்