டில்லியில் முதல்வர் விஜய்க்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை
புதுடில்லி: டில்லி சென்ற முதல்வர் விஜய்க்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தமிழக முதல்வராக, கடந்த 10ம் தேதி விஜய் பதவியேற்றார். முதல்வரான பின், முதல் முறையாக, இன்று காலை 9:30 மணிக்கு தனி விமானத்தில் விஜய் புறப்பட்டு சென்றார்.
டில்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார்; தலைமைச் செயலாளர் சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
அங்கு அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேசுகிறார்.
பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். தமிழக அரசுக்கு தேவையான திட்டங்களுக்கு, நிதி வழங்கக் கோரி, கோரிக்கை மனுவை அளிக்க உள்ளார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார். நாளை சென்னை திரும்புகிறார் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
டில்லியில் முதல்வர் விஜய்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
லைவ் வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா?
டெல்லியில் ஹீட் ஸ்ட்ரோக் அபாயமாம், அதனால சீஎம் இன்னிக்கு இரவே தனி விமானத்துல பறக்க அதிக வாய்ப்பு இருக்கு.
செங்கோட்டையன் ஏற்பாடா? அவுரு தேர்தலுக்கு முன்னாடி சொன்னாரே அதிசயம் நிகழும்ன்னு. அது இதுவா? போலி பெருமை பீத்திக்கிறதில் திருட்டு தீயமுக காரனுங்க பலே கில்லாடிங்களா இருந்தானுங்க. அவனுங்க வழியில் ஆக்டர் விசய்.?
திமுகவினர் ஜெலூசில் பாட்டில் பாட்டில் ஆக குடிக்கவும்
அணிவகுப்பு மரியாதை தந்தது தமிழக போலீசா அல்லது டில்லி போலீசா ? அதே விமானத்தில் சென்றார்களா? ஸ்டாலின் டில்லியிலிருந்து வந்தபோது அதே விமானத்தில் வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்னை ஏர்போர்ட்டில் சால்வை போர்த்தியும் மலர்ச்செண்டு கொடுத்தும் வரவேற்றார்கள்
போலீஸ் மரியாதையா? இதெல்லாம் டூ மச்
தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை ????
தளபதிக்கு ராணுவ மரியாதை அளித்திருக்க வேண்டாமா ?
எவ்வளவோ பார்த்தாச்சு ...எம் ஜி ஆர் , ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் ..பத்தோட ஒன்னு அதோட இதுவும் ஒன்னு நடிகர் விஜய் ..
இது புதிய நடைமுறையா அல்லது வழக்கமான ஒன்றுதானா?
டில்லியில் விமான நிலையத்தில் ஆயிரம் ...பத்தாயிரம் ..லட்சம் ..என்று தொண்டர்கள் திரட்டி வரவேற்பு தர கான்டிராக்டர்கள் இருக்காங்க ..மேலும்
-
மக்கள் தொகையில் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு; மத்திய அரசின் நடவடிக்கைக்கு சசி தரூர் ஆதரவு
-
பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் விஜய்; தமிழக நலன்கள் குறித்த கோரிக்கை மனு சமர்ப்பிப்பு
-
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை முன்னேற்ற சிறப்புப் பயிற்சி: கலெக்டர் அறிவுரை
-
சாலையில் பள்ளத்தால் விபத்து அபாயம்
-
சரக்கு வாகனம் ஆம்புலன்சில் மோதி விபத்து: ஒருவர் பலி
-
ஊருணி கரையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிய கிராம மக்கள்