நீட் மறுதேர்வு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்; மீண்டும் தவறு நடக்காமல் தடுக்க தீவிரம்
புதுடில்லி: தேர்வு வினாத்தாள் கசிந்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 'நீட்' மறுதேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பது முதல், தேர்வு மையங்களுக்கு கொண்டு சேர்ப்பது வரை அனைத்து பணிகளையும் பிரதமர் அலுவலகமே நேரடியாக கண்காணிக்க உள்ளது.
நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு கடந்த 3ம் தேதி நடத்தப்பட்டது. 22 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர். தேர்வுக்கு முன்பாகவே, வினாத்தாள் சமூக வலைதளங்களில் கசிந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, 3ம் தேதி நடத்தப்பட்ட 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறு தேர்வு ஜூன் 21ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், 'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு விவகாரம், நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அடுத்த மாதம் 21ல் நடக்கும் மறுதேர்வுக்கான ஏற்பாடுகளை, பிரதமர் அலுவலகம் நேரடியாக கண்காணிக்க உள்ளது.
டில்லியில் உள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 40 நிமிடங்கள் வரை நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தேசிய தேர்வு முகமை இயக்குனர் ஜெனரல் அபிஷேக் சிங் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் மூத்த உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
எவ்வித குளறுபடிகளுமின்றி நீட் தேர்வை நடத்தி முடிக்க, இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பது, அச்சிடுவது, பாதுகாப்பாக கொண்டு செல்வது, தேர்வு நடத்தும் இடங்களுக்கு விநியோகிப்பது என ஒவ்வொரு கட்டப் பணிகளையும் பிரதமர் அலுவலகம் நேரடியாக கண்காணிக்க உள்ளது. இதற்காக தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் எந்த வகையிலும் கசிந்து விடக்கூடாது என்பதற்காக முன் எப்போதும் இல்லாத வகையில் பல அடுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவால் அரசுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை தொடர்ந்து, தேர்வு அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் வகையில், இந்த உயர்மட்ட கண்காணிப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியும் 'நீட்' தேர்வு விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி வருகிறார். வினாத் தாள் தயாரிப்பு முதல் பல்வேறு கட்டப் பணிகள் குறித்து அவ்வப்போது அவருக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், 'நீட்' மறுதேர்வு எந்த குளறுபடியும் இல்லாமல், நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல நடவடிக்கை மக்கள் மத்தியில் இருந்து வரவேற்கப்படும்
அதுவரை யாரும் உயரிய விருது தருவதாக கூப்பிடாமல் இருக்க வேண்டும்
இந்த அதிரடி நடவடிக்கைக்கு தான் உலகம் முழுவதும் வரவேற்பு தருகிறார் பிரதமர்
ஏன் பிரதமர் இந்த விவகாரம் பற்றி வாய் திறக்க வில்லைமேலும்
-
சாலையில் துப்பாக்கி தோட்டா சோழவரம் போலீஸ் விசாரணை
-
நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநிலங்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
-
திருவள்ளூரில் சொட்டு நீர் பாசனம் 1,000 ஏக்கரில் செயல்படுத்த இலக்கு
-
'நீதித்துறை பாடத்தின் உள்ளடக்கம் சரியானதே' சுப்ரீம் கோர்ட் கண்டித்த கல்வியாளர் திட்டவட்டம்
-
எச்சரிக்கை பலகை இன்றி மையத்தடுப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
-
பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைக்க கோனேரிகுப்பம் மக்கள் கோரிக்கை