நிர்வாக முறைகேடால் 'தாட்கோ'வில் பயனாளிகள் எண்ணிக்கை சரிவு
சென்னை: 'தாட்கோ' வாழ்வாதார திட்டங்களில் பயனடைந்தோர் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டில், 20.59 சதவீதம் குறைந்திருப்பது, எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர் இடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'தாட்கோ' என்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூக மக்களின், கல்வி, பொருளாதார மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, இச்சமூக மக்கள், சுய தொழில் தொடங்க, மானியத்துடன் கூடிய கடன், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, கல்விக்கடன், சிறு கடன் என, பல்வேறு வாழ்வாதார திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்கள் வாயிலாக, பொருளாதாரத்தில் பின் தங்கிய, எஸ்.சி., - எஸ்.டி., மக்களை முன்னேற்றுவதே நோக்கம் என்று கூறப்பட்டாலும், நிதர்சனம் அது கிடையாது.
'தாட்கோவில்' நிலவும், இடைத்தரகர்கள் ஆதிக்கம், அரசியல்வாதிகள் தலையீடு, அதிகாரிகள் அலட்சியம், வங்கி ஒப்புதல் மறுப்பு உள்ளிட்ட காரணங்களால், 'தாட்கோ' வாயிலாக, கடன் பெறுவது கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பலரும் கடன் பெற விண்ணப்பித்து, ஆண்டுக்கணக்கில் காத்திருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், 'தாட்கோ' வாழ்வாதார திட்டங்களில் பயனடைந்தோர் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டில், 20.59 சதவீதம் சரிவடைந்துஉள்ளது.
அதாவது, 2024 - 2025ம் நிதியாண்டில், 'தாட்கோ'வில் பயனாளிகள் எண்ணிக்கை, 12,734 ஆக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில், 10,112 ஆக குறைந்துள்ளது. இது, இச்சமூக ஆர்வலர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
@block_B@ பயனாளிகள் விபரம் நிதியாண்டு பயனாளிகள் எண்ணிக்கை 2021 2022 6,724 2022 2023 7,807 2023 2024 8,458 2024 2025 12,734 2025 2026 10,112 * கடந்த 2021 முதல் பயனாளிகள் எண்ணிக்கை உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2025 - 2026ம் நிதியாண்டில் பயனாளிகள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டை விட 20.59 சதவீதம் குறைந்துள்ளது.block_B
மேலும்
-
மதுரை அரசு மருத்துவமனை விபத்து சிகிச்சை பிரிவில் முடம் நீங்கினால் ஈரல் பாதிக்குது : முடநீக்கியல் பிரிவு நோயாளிகளுக்கு நுரையீரல் நோய்
-
நல்லாற்றில் ஆக்கிரமிப்பு தி.மு.க. ஆபீஸ் சுவர் அகற்றம்
-
குன்றத்தில் நாளை விசாக பால்குடத் திருவிழா அதிகாலை 4:30 முதல் இரவு 9:00 மணி வரை கோயில் நடை திறப்பு
-
ரயில்வே பீடர் ரோட்டில் வடிகால் வசதிக்கு எதிர்பார்ப்பு
-
இன்று இனிதாக (29.05.2026) திருப்பூர்
-
கொடைக்கானலுக்கு பஸ் பொதுமக்கள் வலியுறுத்தல்