'நமது அம்மா' நாளிதழ் இனி பழனிசாமி வசம்
சென்னை: அ.தி.மு.க., அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது அம்மா' அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி வசம் வந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., நாளிதழான, 'நமது எம்.ஜி.ஆர்.,' சசிகலா தரப்பிடம் சென்றதால், 'நமது அம்மா' நாளிதழை பழனிசாமி தொடங்கினார்.
அதன் நிர்வாகம் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம் ஆகியோரிடம் இருந்தது. முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு வேலுமணி, சண்முகம் தரப்பினர் ஆதரவளித்ததால், கட்சி உடைந்ததோடு, 'நமது அம்மா' நாளிதழ், பழனிசாமிக்கு எதிராக மாறியது.
நிர்வாக குழுவில், பழனிசாமி பெயர் நீக்கப்பட்டதால், 'போர்வாள்' என்ற நாளிதழை பழனிசாமி தொடங்கினார்.
இந்நிலையில், வேலுமணி தரப்பினர் பழனிசாமியுடன் மீண்டும் இணைந்தனர். இதனால், 'நமது அம்மா' நாளிதழ் நிர்வாக குழுவில் பழனிசாமி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக செயல்படப்போவது, 'நமது அம்மா' நாளிதழா அல்லது 'போர்வாள்' நாளிதழா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும்
-
மதுரை அரசு மருத்துவமனை விபத்து சிகிச்சை பிரிவில் முடம் நீங்கினால் ஈரல் பாதிக்குது : முடநீக்கியல் பிரிவு நோயாளிகளுக்கு நுரையீரல் நோய்
-
நல்லாற்றில் ஆக்கிரமிப்பு தி.மு.க. ஆபீஸ் சுவர் அகற்றம்
-
குன்றத்தில் நாளை விசாக பால்குடத் திருவிழா அதிகாலை 4:30 முதல் இரவு 9:00 மணி வரை கோயில் நடை திறப்பு
-
ரயில்வே பீடர் ரோட்டில் வடிகால் வசதிக்கு எதிர்பார்ப்பு
-
இன்று இனிதாக (29.05.2026) திருப்பூர்
-
கொடைக்கானலுக்கு பஸ் பொதுமக்கள் வலியுறுத்தல்