முன்விரோத தகராறு : 5 பேர் மீது வழக்கு
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் போலீசார் 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கொங்கராயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் வீரராகுல், 18; இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன் கொங்கராயனுார் கிராமத்தில் உள்ள வாலிபால் மைதானத்தில் விளையாடச் சென்றார்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், ராஜா, தீனா, அரிகிருஷ்ணன், அரிகரன் ஆகிய 5 பேர் சேர்ந்து வீரராகுலிடம் இங்கு விளையாடக் கூடாது என தகராறு செய்ததால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் வீரராகுல் பைக்கில் தெண்பெண்ணை ஆற்று பாலத்தை கடந்து சென்றபோது அங்கிருந்த சதீஷ், ராஜா உட்பட 5 பேர் சேர்ந்து வீரராகுலை வழிமறித்து தாக்கினர்.
இது குறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசில் வீரராகுல் அளித்த புகாரின்பேரில் சதீஷ், ராஜா, தீனா, அரிகிருஷ்ணன், அரிகரன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.