காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுக
@quote@ வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் மேலும் 29 ரூபாய் உயர்த்தியுள்ளன.
மேற்காசிய போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், எரிபொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் உயர்ந்துள்ளதே காரணம் என, எண்ணெய் நிறுவனங்கள் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால், அனைத்து நெருக்கடிகளையும் கடந்து, விலை உயர்விலிருந்து, மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் உள்ளது.
எனவே, பன்னாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வை, எண்ணெய் நிறுவனங்களும், அரசும் இன்னும் சில மாதங்கள் தாங்கி கொள்ள வேண்டும். மக்கள் மீது சுமத்தப் பட்டுள்ள இந்த விலை உயர்வை, உடனே திரும்பப் பெற வேண்டும்.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,quote
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement