துபாயில் லாரி மீது மோதிய மினி பஸ்; இந்தியர்கள் 7 பேர் பலி

2

துபாய்: துபாயில் லாரி மீது மினி பஸ் மோதிய விபத்தில் இந்தியர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

எமிரேட்ஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த லாரி ஒன்று திடீரென பழுதானது. அந்த லாரி சாலையின் நடுவில் நிறுத்தப்பட்டு இருந்தது.

அப்போது அதே சாலையில் வந்து கொண்டிருந்த மினி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக பழுதாகி நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அவர்கள் இந்தியர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Advertisement