ராசிபுரத்தில் மாற்றியமைக்கப்பட்ட பஸ் வழித்தடத்தில் எஸ்.பி., ஆய்வு
ராசிபுரம்; ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, சேலம், நாமக்கல் செல்லும் பஸ்கள், கடந்த சில ஆண்டு-களாகத் டி.வி.எஸ்., தெரு மற்றும் பெரியசாமி கடை வழியாக சென்று வந்தன. இதனால், நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் புதிய அரசு பதவி-யேற்ற பின், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுப் போக்குவரத்து வழித்தடங்களை மாற்ற அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஏற்க-னவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று முதல் ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து சேலம், நாமக்கல் செல்லும் பஸ்கள், சர்ச் வழி-யாக செல்லத்தொடங்கின. இந்த புதிய வழித்தட மாற்றத்தால், போக்குவரத்து நெரிசல் குறைகி-றதா என்பது குறித்து ஆய்வு செய்ய, நாமக்கல் எஸ்.பி., விமலா, நேற்று ராசிபுரத்திற்கு வருகை தந்தார். அவர், பஸ்கள் புதிய வழித்தடத்தில் தடையின்றி செல்கிறதா என்பதையும், பொதுமக்-களுக்கு ஏதேனும் சிரமம் உள்ளதா என்பதையும் கேட்டறிந்தார்.ஆய்வின் போது ராசிபுரம் டி.எஸ்.பி., விஜய-குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.