செவிலியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ராசிபுரம்; தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின், நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ராசிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ராதாமணி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, தஞ்சாவூர் மாவட்ட தலைவர் அனிதா கலந்துகொண்டார். கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நேற்று நிறை-வேற்றப்பட்டன. மாவட்ட அளவிலான கோரிக்-கைகள் தொடர்பாக, வரும் ஜூன், 10ல் நடக்கும் குறைகேட்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தின் நிறைவாக, நாமக்கல் மாவட்டத்-திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட தலைவராக அகிலா, மாவட்ட செயலா-ளராக ஜனிதா, பொருளாளராக வீரவள்ளி மற்றும் சங்க ஆலோசகராக சவுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவர்களாக லலிதா, ராஜலட்சுமி, கவிதா, சந்திரா மற்றும் ராதாமணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement