சரக்குவேன் மோதி தொழிலாளி காயம்

மல்லசமுத்திரம்; சேலம் மாவட்டம், ஓமலுார் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் ராஜேந்திரன், 37; சென்டரிங் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், பள்ளிப்-பாளையம் அருகே, ஐந்துபனை பகுதியில் உள்ள உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, 'ஸ்பிளண்டர் புரோ' டூவீலரில் சென்றார். பின், நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.


மோர்பாளையம் விவேகானந்தா தனியார் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த, 'டாடா ஏஸ்' சரக்கு வேன், டூவீலர் மீது நேருக்-குநேர் மோதியதில் ராஜேந்திரன் துாக்கி வீசப்-பட்டார். தலைக்கவசம் அணியாததால், தலையில் பலத்த அடிபட்டு, சேலம் அரசு மருத்-துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனும-திக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய சரக்-குவேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மல்லசமுத்திரம் போலீசார்
விசாரித்து வருகின்றனர்.

Advertisement