இது ஒரு நுாற்றாண்டு நிகழ்வு

21ம் நுாற்றாண்டின் நீண்ட சூரிய கிரகணம், 2027 ஆக.2ல் நிகழ உள்ளது. இது 6 நிமிடம், 23 வினாடி நேரம் நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியன், நிலவு, பூமி ஒரே நேர்கோட்டில் அமைந்து நடுவில் நிலவு இருக்கும் போது சூரிய ஒளியை நிலவு மறைக்கும். அதன் நிழல் பூமியில் விழும். இதுதான் சூரிய கிரகணம். ஆண்டுக்கு குறைந்தது 2 சூரிய கிரகணம் நிகழ்வது வழக்கம். இந்த நீண்ட சூரிய கிரகணம் ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் தெரியும். இதற்கு முன் 20ம் நுாற்றாண்டில் நீண்ட சூரிய கிரகணம் (7 நிமிடம், 8 வினாடி), 1955 ஜூன் 20ல் நிகழ்ந்தது.

Advertisement