மத்திய அரசு தமிழகத்துக்கான பேரிடர் மேலாண்மை நிதியை தந்துள்ளது; செங்கோட்டையன் தகவல்
சென்னை: மத்திய அரசு தமிழகத்துக்கான பேரிடர் மேலாண்மை நிதியை தந்துள்ளது. பேரிடர் மேலாண்மை நிதி ரூ.ஆயிரம் கோடி வந்துள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: மக்கள் எண்ணங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். மக்கள் விரும்பிய சிறந்த ஆட்சியை தமிழகத்தில் முதல்வர் விஜய் தந்து இருக்கிறார். ஜாதி சான்றிதழ் விரைந்து கிடைக்கவும், பத்திரப் பதிவு துறையில் உள்ள தேக்கங்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பேரிடர் மேலாண்மை நிதி ரூ.1,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநில அரசு கேட்ட நிதியை முன்கூட்டியே மத்திய அரசு வழங்கி உள்ளது. முதல்வரை பொறுத்தவரைக்கும் செயல்பாடு தான் முக்கியமாக நினைக்கிறார். நான் சொன்னதை செய்கிறோமா? முடிக்கப்பட்டு இருக்கிறதா?
மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதை தான் பார்க்கிறார், பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை காட்டிலும் செயல்வடிவில் அவர்களது திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே பெய்துள்ளது.
மாரிதாஸ் என்ன விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று எனக்கு சட்ட ரீதியாக தெரியவில்லை. பத்திரிகை சுதந்திரம் என்பது முழுமையாக சுதந்திரம் வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால், மக்கள் வளர்ச்சி பணியில் இருக்க வேண்டும்.
தனிப்பட்ட விமர்சனங்கள் இல்லாமல் மக்கள் வளர்ச்சி பணிகள் எப்படி இருக்க வேண்டும் என்று பத்திரிகைகள் சொல்லும் போது பத்திரிகை சுதந்திரம் மட்டுமல்ல, நாடே வளர்ச்சி அடையும். இண்டி கூட்டணியில் இருந்து திமுக வெளியேறி இருக்கிறது. எங்கள் கொள்கை முடிவு என்ன என்பதை முதல்வர் தெரிவிப்பார். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
மத்திய அரசு பணம் கொடுக்க வில்லை என்பது தானே 5 வருடம் ரெகுலராக கேட்டது. அப்படி திசை மாற்றி அரசியல் செய்வது தானே, போலி த்ராவிடனின் அரசியல்.
லஞ்சம் இல்லாமல் திட்டங்களை செயல்படுத்தினால் மழைக்காலத்தில் சென்னையில் எதற்கு போட்டில் பயணம் செய்ய வேண்டும்? இந்த அரசாவது அதை மாற்றுமா?
தேர்தலில் தளிர்கள் ஓட ஓட விரட்டியடித்துவிட்டதால் பாடம் கற்றுக்கொண்டார்களோ?
அதற்காக இந்த அந்த அரசு அடகு வைத்தது என்ன என்பதையும் தெரிவிக்கவேண்டும்.
இந்த பருவ மழையில நீங்களாச்சும் ஒழுங்கான பேக்கேஜா சென்னையில போடுங்க!
For patta issue revenue department employees under hand dealings unimaginable and needs strict action against corrupt government employees without any fear or favour.
பத்திரப் பதிவு செய்வோர்க்கு அரசே ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலித்து, ஒரே மாதத்தில் பட்டா வீட்டிற்கே speed postல் வரும் நடைமுறையை கொண்டு வரலாம். Ease of living.
பத்திரப்பதிவு துறையில் வீடுகட்டும் மனைகளுக்கான வழிகாட்டு மதிப்பு தான் அரசுக்கு இழப்பையும் கருப்பு பண ஊக்குவிப்புக்கும் தலையாய காரணம் என்பது அமைச்சருக்கு தெரிந்திருக்குமே .. இதைப்பற்றி எந்த கருத்தையும் சொல்ல வேண்டாமா ?
இந்த அரசாங்கம் ஒரிஸா திரு.நவீன் பட்நாயக் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் போல மத்திய அரசுடன் இணைந்துதான் செயல்படும் என்பதை ராஜ்யசபா சீட்டைக் காங்கிரஸ்க்கு கொடுத்த தன் மூலம் அறிய முடிகிறது.ஒரு ராஜ்யசபா சீட் மூலம் ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாத சூழல் ஏற்படும்.அதுவும் ஒரு ராஜதந்திரம். காங்கிரஸால் எந்த உபயோகமும் இல்லை என்பதைத் தவெக புரிந்து வைத்துள்ளது..
அப்புறம் என்ன ஆட்டைய போடுங்க , கொஞ்சமா தான் கொடுத்தாங்கன்னு சொல்லுங்க
இதல்லாம் நம்ம பழம் தின்னு கொட்டைய போட்டவர்களுக்கு தெரியாதா
மத்திய அரசு தந்துள்ள அந்த பேரிடர் மேலாண்மை நிதியை இப்பொழுது நீங்கள், அதாவது உங்கள் அரசு, அது யாருக்கு கொடுக்கப்படவேண்டுமோ, அதாவது பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக தரவேண்டும்.... அதில் கொஞ்சம் கூட ஆட்டை போடாமல்.