போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து பெண் போலீசை மிரட்டிய இருவர் கைது

1


சிவகங்கை:
சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து பெண் போலீசை மிரட்டிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டு ஜெயா செல்வி மட்டும் பணியில் இருந்தபோது, சரித்திர பதிவேடு குற்றவாளிகளான அண்ணன் தம்பிகளான சூர்யபிரகாஷ் (எ) சூர்யா (27) , தங்கசாமி என்ற நவீன்
இருவரும் வந்துள்ளனர். 'நாங்கள் வீட்டில் இல்லாத போது எங்களை வீட்டிற்கு வந்து விசாரித்த போலீஸ் யார் என்று சொல்ல மாட்டியா' என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.

'இனியும் எங்களை தேடி வீட்டிற்கு போலீஸ் வந்தால் கொல்லாமல் விடமாட்டோம்' என்று கூறியுள்ளனர். வெளியே போகும்படி கூறியும் போகாமல், அட்டகாசம் செய்துள்ளனர். இதையடுத்து ரோந்து பணிக்கு சென்ற இன்ஸ்பெக்டர் போலீசாரை வரவழைத்தார். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Advertisement