மின் கம்பிகள் மீது விழுந்த மரம்

குன்னுார்: குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய பலத்த காற்றில், வண்ணாரப்பேட்டை சாலையில் மின்கம்பிகள் மீது மரம் விழுந்தது. கம்பம் சேதமடைந்தன. இதனால், வண்ணாரபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில், முன்னணி தீயணைப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், நவீன மர அறுவை இயந்திரங்களை பயன்படுத்தி, மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மின் ஊழியர்கள் உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதால் ஒரு மணி நேரத்தில் மின்வினியோகம் சீரானது.

Advertisement