பருவநிலை மாற்றம் தொடர்பாக மாணவர்களுக்கு ஓவிய போட்டி

கோத்தகிரி: ஊட்டி சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் மையம், மத்திய வனம் மற்றும் காலநிலை மாற்றம் நிறுவனம் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கோத்தகிரியில் நடந்த ஓவிய போட்டி நிகழ்ச்சிக்கு, கோத்தகிரி நகராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமாரி தலைமை வகித்து பேசினார்.

கோத்தகிரி சிட்டிசன் போரம் அமைப்பின் தலைவர் அருண்பெள்ளி ஓவிய போட்டியை துவக்கி வைத்தார். இயற்கை விவசாயி ராம்தாஸ், ‘இன்றைய சூழலில் மண்ணின் வளத்தை பாதுகாக்க இயற்கை விவசாயம் மட்டுமே சாத்தியம்,’ என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில், எட்டு பள்ளிகளில் இருந்து, மாணவ, மாணவியர் பங்கேற்று ஓவியம் வரைந்தனர். சி.பி.ஆர்., சுற்றுசூழல் மைய கள அலுவலர் குமாரவேலு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Advertisement