மன்னிப்பு கேட்ட 21 பேர் தப்பினர்; ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்கள் மீது நடவடிக்கை: சபாநாயகர்
சென்னை: அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் தகுதி நீக்கம் இல்லை; ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் 4 பேர் மீதான நடவடிக்கை தொடங்கியுள்ளது என்று சபாபநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது:அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் தகுதி நீக்கம் இல்லை. மன்னிப்பதாக கடிதம் அளித்த இபிஎஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் அந்த கட்சியின் கொறடா உத்தரவை மீறிய காரணத்தால் அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை தொடங்கியுள்ளது. எம்எல்ஏக்கள் 4பேர் மீதான நடவடிக்கை முடிந்ததும் அறிவிப்பேன். 21 எம்எல்ஏக்களின் வருத்தத்தை ஏற்றுக் கொண்டதாக கூறிய இபிஎஸ் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு சபாநாயகர் கூறினார்.
இதனால், எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் 21 பேர் கட்சித்தாவல் தடைச்சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பினர். சபாநாயகர் அறிவிப்பின்படி, ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்த சத்ய பாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தவெகவை ஆதரித்த MLAக்கள் மீது என்ன நடவடிக்கை? சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர் சந்திப்பு தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (5)
V K - Chennai,இந்தியா
09 ஜூன்,2026 - 14:01 Report Abuse
ஆமாம் நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது தா வெ க கட்சியில் இணையும் படி நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது 0
0
Reply
Govi - ,
09 ஜூன்,2026 - 13:49 Report Abuse
நீ எப்படினு
தெரியும் 0
0
Reply
Aam Aathmi (Mango Man) - mumbai,இந்தியா
09 ஜூன்,2026 - 13:40 Report Abuse
அம்மா விசுவாசம் நீங்கவில்லை 0
0
Reply
ஹரி - ,
09 ஜூன்,2026 - 13:38 Report Abuse
ஆளுக்கு 500 அபராதம். 0
0
Reply
Bala - Chennai,இந்தியா
09 ஜூன்,2026 - 13:33 Report Abuse
ராஜினாமா செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? 0
0
Reply
மேலும்
-
நகை, பணத்துடன் தொலைத்த பர்ஸ் உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்
-
கணிசமான வருவாய்க்கு ‘ஹைபிரிட்’ சுரைக்காய்
-
நாளை 3 மாவட்டம், ஜூன் 12ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
பயணியர் கூட சரிவு பாதை மாற்றி அமைக்க கோரிக்கை
-
சைபர் மோசடிகளின் மையமாகும் இலங்கை!
-
12 ஆண்டுகளில் ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் மக்கள் சேவையாற்றிய பிரதமர் மோடி
Advertisement
Advertisement