கணிசமான வருவாய்க்கு ‘ஹைபிரிட்’ சுரைக்காய்
‘ஹைபிரிட்’ சுரைக்காய் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, பட்டாபிராம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி.குமார் கூறியதாவது:
மல்லி, கனகாம்பரம் ஆகிய பூந்தோட்டத்தை சுற்றிலும் சுரைக்காய், பீர்க்கங்காய் சாகுபடி செய்துள்ளேன். பூந்தோட்டத்தை பொருத்தவரையில், தினசரி வருவாய் ஈட்டக்கூடிய பணப் பயிராகும். இந்த பூ சாகுபடி செய்த நிலத்தை சுற்றிலும், ‘ஹைபிரிட்’ சுரைக்காய், பீர்க்கங்காய் ஆகிய கொடி வகை காய்கள் சாகுபடி செய்துள்ளேன்.
இந்த சுரைக்காய் பிஞ்சு விடும் போது காய் வளர்ச்சிக்கு ஏற்ப, வேலி வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போது தான், சுரைக்காய் தடையின்றி வளர்ச்சி பெறும். ஒவ்வொரு காயும் மூன்று கிலோ வரையில் எடை கிடைக்கும். எடை போட்டு விற்பனை செய்யும் விவசாயிகள் கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
– ஜி.குமார்,
99528 58097.