நகை, பணத்துடன் தொலைத்த பர்ஸ் உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் -தேரிருவேலி விலக்கு ரோட்டருகே நகை, பணத்துடன் கீழே கிடந்த பர்ஸ் உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
முதுகுளத்துார் அருகே மருதகம் கிராமத்தை சேர்ந்த தனவல்லி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக முதுகுளத்துார் வந்தார். இவரது கையில் வைத்திருந்தத பர்ஸ் தொலைந்தது. இதில் ரூ.4000 பணம், 6 கிராம் தங்க தோடு இருந்துள்ளது.இதுகுறித்து முதுகுளத்துார் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து முதுகுளத்துார் எஸ்.ஐ., முகிலரசன் தலைமையிலான போலீசார் சிசிடிவி., கேமராக்களை ஆய்வு செய்து முதுகுளத்துார் -தேரிருவேலி விலக்கு ரோட்டில் கீழே கிடந்த பர்ஸை கண்டுபிடித்தனர். பின்பு டி.எஸ்.பி., சண்முகம் தலைமையில் போலீசார் தொலைத்த பர்ஸ்சை நேரில் வரவழைத்து உரியவரிடம் ஒப்படைத்தனர். பர்ஸ்சை விரைந்து கண்டுபிடித்த போலீசாரை மக்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement