வாலிபர்களை தாக்கி வழிப்பறி:  போலீஸ் ஏட்டு 'சஸ்பெண்ட்' 

கடலுார்: விருத்தாசலத்தில் வாலிபர்களை தாக்கி வழிப்பறி செய்த போலீஸ் ஏட்டுவை, 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் தினேஷ்குமார்,19; இவர், தனது நண்பர்கள் விருத்தாசலம் நல்லேந்திரன் மகன் சத்யநாராயணன்,18; பிரேம்குமார் மகன் ஜேக்கப்,18; ஆகியோருடன் கடந்த 7ம் தேதி மொபட்டில் பெரியார் நகர் அருகில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, விருத்தாசலம் காவல் நிலைய ஏட்டு ரஞ்சித், தனது நண்பர் விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதி சரித்திர பதிவேடு குற்றவாளி சுபாஷ் (எ) சுபாஷ் சந்திரபோஸ்,24; என்பவருடன் சேர்ந்து மதுபோதையில், தினேஷ்குமார் உள்ளிட்டோரை வழிமறித்து தாக்கினார்.

தொடர்ந்து, சத்யநாராயணனின் மொபைலை பறித்துச் சென்றார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து ரஞ்சித், சுபா ைஷ ஜூன் 8 கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏட்டு ரஞ்சித்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி., ஜெயக்குமார் ஜூன் 9 உத்தரவிட்டார்.

Advertisement