விதிமீறி பிடித்தம் செய்த தொகையை வழங்க கோரிக்கை
கோவை: விதிமீற பிடித்தம் செய்யப்பட்ட ஜி.பி.எப்., தொகையை திரும்ப வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் முறையிட்டுள்ளனர்.
கிணத்துக்கடவு, எஸ்.எஸ். குளம், பொள்ளாச்சி தெற்கு ஆகிய ஒன்றியங்களில், கடந்த 2011 முதல் 2013 வரை சத்துணவு திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஜி.பி.எப்., பிடித்தம் செய்யப்பட்டது. திட்டத்தில், 2015 முதல் பிற ஒன்றிய ஊழியர்களுக்கு ஜி.பி.எப்., தொகை பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், சிறப்பு பொது வைப்பு தொகை பிடித்தம் செய்வதற்கான அரசாணை வெளியிடும் முன், இம்மூன்று ஒன்றியங்களிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 449 அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு, சிறப்பு பொது வைப்புத் தொகை எண் பெறப்படாமலேயே தவறுதலாக ஜி.பி.எப்., தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. தவறுதலாக பிடித்த தொகையை திரும்ப வழங்க ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சத்துணவு அமைப்பாளர்கள் கூறுகையில், ‘40 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியம் பெற வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கவே அலைக்கழிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சிறப்பு பொது வைப்பு தொகை எண் பெறப்படாமல் மூன்று ஆண்டுகள் தவறுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ஜி.பி.எப். தொகையை, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு விரைந்து வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
மேலும்
-
அரசு நிர்ணய விலையில் ஜல்லி, எம்.சாண்ட் விற்பனை
-
கோயிலில் மறுபூஜை
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும் ரோட்டில் பள்ளம் ஏற்படுத்திய குடிநீர் குழாய் கசிவு சீரமைப்பு
-
ரயில்வே ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
-
சட்டபை தேர்தல் செலவு கணக்கு விபரம் சமர்ப்பிப்பு
-
பிளாஸ்டிக் ஒழித்து நீர்நிலைகளை காக்க வேண்டும் தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு