கொலுசு திருடிய டிரைவர் கைது
ஊட்டி: ‘ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கேரள மாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குழந்தையின் காலில் இருந்த இரண்டு கிராம் தங்க கொலுசை காணவில்லை,’ என, ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் அன்பரசு உத்தரவின் பேரில் எஸ்.ஐ., நித்தியானந்தா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். முதியவர் ஒருவர் கேரள மாநில சுற்றுலா பயணிகளின் பின்னால் சென்று நீண்ட நேரம் காத்திருந்து கூட்ட நெரிசலின் போது காலில் இருந்த கொலுசுவை கழட்டி திருடி சென்றது தெரியவந்தது.
விசாரணையில், அவர் கோத்தகிரி பகுதியை சேர்ந்த துரைசாமி, 60, டாக்சி டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, நகையை பறிமுதல் செய்து சுற்றுலா பயணிகளிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுவர் ஏறி குதித்து டி.ஆர்.ஐ., அலுவலகத்தில் ஆவணங்களை திருட முயன்ற 4 பேர் கைது
-
சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை நட்புக்காக அமைக்கிறது இஸ்ரேல்
-
சில மணி நேர இடைவெளியில் கியூபா – ஈரானில் நிலநடுக்கம்
-
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்த கொட்டகையை அகற்றிய அதிகாரிகள்
-
மாமல்லை சாலை சந்திப்பில் சாலை தடுப்புகளால் இடையூறு
-
இன்றைய நிகழ்ச்சி
Advertisement
Advertisement