அரசுப் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

விழுப்புரம் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் டேவிட்  குணசீலன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். மாவட்ட செயலாளர் குமரவேல், மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி, அரசுப் பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் முருகன், மாவட்ட இணைச் செயலாளர் பாரதி, வட்ட தலைவர் அந்தோணி ஜார்ஜ் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில், சங்க உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது. நாள்காட்டி பணியை உடனடியாக முடித்து, மாநில மையத்திற்கு அனுப்புவது. மாவட்டத்தில் உள்ள அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க, அரசை வலியுறுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் முடிவு செய்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement