ரயில்வே ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மதுரை, ஜூன் 10-
ரயில்வே ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பயண பாஸ், இனிமேல் இ -பாஸாக வழங்கப்படும் என்ற உத்தரவை ரத்துசெய்யக் கோரி, தட்சிண ரயில்வே ஓய்வூதியர் சங்கம், தேசிய ஓய்வூதியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தட்சிண ரயில்வே ஓய்வூதிய சங்க கோட்டத் தலைவர் கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார்.
ரயில்வே ஓய்வூதியர்கள் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் பலருக்கு ஆண்ட்ராய்டு அலைபேசியைப் பயன்படுத்த தெரியாது. தற்போது ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பயண பாஸ், இ- பாஸாக வழங்கப்படும் என ரயில்வே வாரியத்தின் உத்தரவு, ஓய்வூதியர்களிடையே தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பழைய பயண பாஸ் முறையையே பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மத்திய சங்க துணைத் தலைவர் திருமலை ஐயப்பன், கோட்டச் செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் சங்கர நாராயணன், லெனின் பங்கேற்றனர். கோட்டச் செயலாளர் ஆர்.சங்கர நாராயணன் நன்றி கூறினார்.
மேலும்
-
அசைக்க முடியாத ஆதரவை வழங்குவதாக வடகொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் உறுதி
-
பயணியர் விமானங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்; பாக்., ஆதரவுடன் அரங்கேறுவது அம்பலம்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்களை மறைக்க பாக் பரப்பும் பொய் செய்தி: இந்தியா கண்டனம்
-
பிரான்சில் ஜி 7 உச்சி மாநாடு; பிரதமர் மோடி பங்கேற்கிறார்
-
அரசுக்கு தபால் அட்டை அனுப்பிய அலுவலர்கள்
-
கமுதி அரசு மருத்துவமனையில் 51 இலவச மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சாதனை