ரோட்டில் பள்ளம் ஏற்படுத்திய குடிநீர் குழாய் கசிவு சீரமைப்பு

வடமதுரை:தென்னம்பட்டி கே.குரும்பபட்டி பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து நீர் கசிவால் ரோட்டில் ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டிருந்த பகுதியில் தினமலர் செய்தி எதிரொலியாக சீரமைப்பு பணி நடந்தது.

வடமதுரை ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில் பகுதியில் இருந்து அய்யலுார் எரியோடு ரோட்டில் ஒத்தக்கடை வரை இருக்கும் ரோடு இரு ஆண்டுகளுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டது. இந்த ரோட்டோரத்தில் ரோடு விளம்பில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைந்து நீர் கொப்பளிக்க ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டன. இவ்வழியே செல்லும் டூவீலர்கள் விபத்தில் சிக்கின. தினமலர் நாளிதழில் செய்தி வெளியாக இதன் எதிரொலியாக குடிநீர் வாரியத்தினர் நீர் கசிவை சரி செய்து, ரோடு பள்ளங்களையும் மூடினர்.

Advertisement