கல்குவாரி உரிமையாளர்கள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் மனேஷ் குமார் தலைமையில் நடந்தது.

விவசாயிகள் சங்கம் சார்பில் ஆபேல் மூர்த்தி பேசியதாவது: திருமங்கலம் பகுதியை கடந்து செல்லும் குண்டாறு, விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த ஆறு தற்போது கல்குவாரி உரிமையாளரிடம் சிக்கி அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்த ஆற்றை ஆக்கிரமித்துள்ள கல்குவாரி உரிமையாளர்கள் விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். திருமங்கலம் பகுதியில் விதிமுறை மீறி செயல்படும் கல்குவாரிகளை அதிகாரிகள் இதுவரை ஆய்வு செய்யவில்லை. அவற்றை உடனே ஆய்வு செய்து விதிமீறல்கள் இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தாசில்தார் மனேஷ்குமார் பதில் அளிக்கையில், ‛‛தமிழக அரசு விரைவில் அனைத்து குவாரிகளையும் ‛ட்ரோன்’ மூலம் சர்வே செய்ய முடிவு செய்துள்ளது. அப்போது அனைத்து குவாரிகளையும் முழுமையாக ஆய்வு செய்து விதிகளை மீறிய குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Advertisement