ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்களை மறைக்க பாக் பரப்பும் பொய் செய்தி: இந்தியா கண்டனம்
புதுடில்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை மறைக்க பாகிஸ்தான் பொய்யான தகவல்கள் மற்றும் செய்திகளை பரப்பி வருகிறது என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வணிகர் ஒருவரை பாக்., பாதுகாப்புப் படை சுட்டுக்கொன்றதால், மக்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தை கலைக்க மக்கள் மீது பாதுகாப்புப்படை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்த நிலையில், 200 பேர் காயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுதும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக டில்லியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் போலி செய்திகள் மற்றும் வீடியோக்களை கண்காணித்து வருகிறோம். தனது சொந்தத் தோல்விகளை மறைக்கவும், மனித உரிமை மீறல் பிரச்னையில் திசைதிருப்பவும் பாகிஸ்தான் செய்யும் வீணான முயற்சி.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசாரின் அடக்குமுறை காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் தவறான செயல்கள் மற்றும் அத்துமீறல்களுக்கு அந்நாட்டை சர்வதேச சமூகம் பொறுப்பாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இவர்கள் நாட்டை ஆக்கிரமிக்கும் முயற்சியை மறைக்க துக்கடா நாட்டை குறைகூறிக்கொண்டே மக்களை திசை திருப்புகிறார்கள்.
இப்படி துக்கடா நாட்டைப்பற்றி பேசிக்கொண்டே காலத்தை கழிப்பதுதான் முன்னேறிவிட்ட இந்தியாவின் வேலையா?.மேலும்
-
பூனைகள் சண்டையால் மோதல் 20 பேர் மீது வழக்கு பதிவு
-
ஓசூர் அரசு கலைக்கல்லுாரியில் 29 வரை முதல்கட்ட கலந்தாய்வு
-
நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்த 4 பேர் மீது வழக்கு
-
பறிமுதல் வாகனங்களால் மக்கள் அவதி கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
-
சிறுநீரக நோய்க்கு சிகிச்சை அளிக்க மற்றொரு அரசு மருத்துவமனை
-
நகர்ப்புற பெட்ரோல் பங்க்குகளில் எத்தனால் சேமிக்க வசதியில்லை: டீலர்கள் கவலை